Monday, November 21, 2011

டின்டினின் சாகசங்கள் The Adventures of Tintin-The Secret of the Unicorn (2011)

படத்தை பற்றி பார்பதற்கு முன்பு டின் டின் யார் என்று பார்போம். 17 வயது நிரம்பிய துப்பறியும் கார்ட்டூன் கதாபாத்திரம் தான் டின் டின். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவரின் பெயர் Hergé. இவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கார்டூனிஸ்ட். டின்டினின் சாகசங்கள் என்ற தலைப்பில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை எழுதி தள்ளினார். சுருக்க சொல்லவேண்டு என்றால் டின்டின் ஜேம்ஸ் பாண்டு போன்று ஒரு கற்பனை பாத்திரம். டிண்டின் காமிக்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதமாக எழுத பட்டு இருக்கும்.
டின்டினின் அணைத்து காமிக்ஸ்கலிலும் அவனுக்கு உற்ற தோழனாக வருவது அவனது நாய் ஸ்னோவி (Snowy). மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ஹேடாக் (Haddock), இவர் ஒரு கப்பல் கேப்டன். சதா எந்த நேரமும் தண்ணியில் மிதப்பவர். பிறகு ப்ரொஃபஸர் கால்குலஸ் (calculus), இவர் ஒரு விஞ்ஞானி. காமிக்ஸில் வரும் முக்கிய விஞ்ஞான புதிர்களை அவிழ்ப்பதற்க்கு இவர் பயன் படுவார். இது போக இரட்டைப் போலீஸ்காரர்கள் "தாம்ஸன்" & "தாம்ப்ஸன்" (Thomson & Thompson). இந்த படத்தில் ஸ்னோவி, ஹேடாக் மற்றும் "தாம்ஸன்" & "தாம்ப்ஸன்" மட்டுமே உள்ளனர். ஏனோ கால்குலஸ் இல்லை. வில்லனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் ஸாஹரின் (Sakharine).
      
மொத்தம் 23 டின்டின் காமிக்ஸ்கள் வெளிவந்துள்ளன. இந்த திரைப்படம் முன்று காமிக்ஸ்களின் கதையை கலவையாக்கி வெளிவந்துள்ளது. The Secret of the Unicorn (1943), The Crab with the Golden Claws (1941) மற்றும் Red Rackham's Treasure (1944) ஆகிய மூன்று காமிக்ஸ் கதைகளையும் சேர்த்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படமே இந்தப் படம்.  
படம் ஆரம்பித்தவுடன்  நாம் கதைக்குள் நுழைந்து விடுவோம். டின்டின் ஒரு பொம்மை கப்பலை (Unicorn) ஒரு பவுண்ட் விலை குடுத்து வாங்குவார். அங்கு வரும் ஸாஹரின் அந்த கப்பலை தனக்கு குடுக்கும்மாறு டின்டினை மிரட்டுவார். ஆனால் டின்டின் அதற்கு மறுத்து கப்பலை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். வீட்டில் நாய் ஸ்னோவிக்கும் ஒரு பூனைக்கும் நடக்கும் சண்டையில் அந்த பொம்மை கப்பல் உடைந்து விடுகிறது. அதில் இருந்த ஒரு ரகசிய பேனா வெளி வந்து மேசை அடியில் சென்று ஒளிந்து கொள்கிறது.

டின்டின் வெளியில் சென்ற நேரம் பார்த்து ஸாஹரின் ஆட்கள் வந்து டின்டினின் வீட்டை சோதனையிட்டு அந்த கப்பலை திருடி சென்று இருப்பார்கள். அபொழுது தான் டின்டின்க்கு அந்த கப்பலில் ஏதோ மர்மம் இருப்பது புரிய வரும். தவறி மேசைக்கு அடியில் விழுந்த பேனாவை நாய் ஸ்னோவி கண்டுபிடித்து விடும். அந்த பேனாவின் உள்ளே ஒரு காகிதம் இருக்கும். படித்து பார்த்தால் ஏதோ புதையல்க்கு ஆனா ரகசிய குறியீடு போல் தோன்றும்.
மறு நாள் டின்டின் வீட்டுற்கு வரும் ஒரு மர்ம ஆசாமி ஸாஹரின் ஆட்களால் சுட்டு கொல்ல படுகிறார். பிறகு அந்த மர்ம ஆசாமி ஒரு போலீஸ்காரர் என்று தெரிய வருகிறது. அவர் டின்டினிடம் ஏதோ ஒரு ரகசியத்தை சொல்ல வந்து இருப்பார், ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்து விடுவார். அதன் பிறகு அங்கு நடக்கும் கலாட்டாவில் டின்டின் ஸாஹரின்  ஆட்களால் தாக்கப்பட்டு காரபௌட்ஜின் (Karaboudjan) என்ற கப்பலுக்கு பெட்டியில் அடைத்து எடுத்து செல்ல படுகிறான். அந்த கப்பலில் இருந்து நாய் ஸ்னோவியின் உதவியுடன் தப்பிக்கும் டின்டின், அதே கப்பலில் சிறைவைக்கப்பட்ட கேப்டன் ஹேடாக்கை (Haddock), சந்திக்கிறான்.
டின்டின்னும் கேப்டன் ஹேடாக்வும் இனைந்து காரபௌட்ஜின் (Karaboudjan) கப்பலில் இருந்து தப்பிக்கிறார்கள். தப்பித்த டின்டின் பஹார் (Bagghar) என்ற ஊரில் புதையல்க்காண ரகசியம் மறைந்து இருப்பதை அறிகிறான். ஹேடாக், டின்டின் மற்றும் ஸ்னோவி  பஹார் (Bagghar) செல்கிறார்கள். புதையலை ரகசியத்தை தேடி வில்லன் ஸாஹரின் மற்றும் அவனது ஆட்கள்களும் அங்கு வருகிறார்கள்.

ஸாஹரின் கேப்டன் ஹேடாக்கை மற்றும் டின்டினை ஏன் கடத்தினான். புதையல் ரகசியம் என்ன ? டின்டின் அந்த புதிர்களை எப்படி அவிழ்த்தான் ? புதையல் இருந்ததா ? அதை யார் கை பற்றினார்கள் ? என்ற பல கேள்விகள்க்கு டின்டினின் சாகசங்கள் முலம் படம் பதில் சொல்கிறது.

இதை படம் என்று சொல்வதை விட ஒரு அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் 3D அனுபவம். படத்தின் இறுதியில் வரும் துரத்தல் கட்சிகள் உங்களை மெய் சிலிர்க்க வைத்து விடும்.
      
படத்தை இயக்கியவர் ஸ்பீல்பெர்க் (Spielberg). இவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. இவரே தான் ஒரு டின்டின் காமிக்ஸ் ரசிகன் என்று கூறி உள்ளார். அதனால் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார்.

இந்த அளவு தந்துருபமான கிராபிக்ஸ் கட்சிகளை நான் வேற எந்த படத்திலும் பார்த்ததில்லை, அவதார் தவிர்த்து.
டின்டின் காமிக்ஸ் பிரியர்கள் மட்டும் அல்லது அணைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக படம் வெளிவந்துள்ளது.

My Rating: 7.8/10......


7 comments:

  1. மிகவும் அருமையான விமர்சனம்.
    நானும் எங்க ஊர்ல படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இங்கு இன்னும் வெளியிடவில்லை.

    ReplyDelete
  2. கண்டிப்பாக பாருங்கள்...முக்கியமாக 3D'ல் பார்த்தால் இந்த படம் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்..

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம் காமிக்ஸ் கதாபாத்திரங்கள், கதை, துளிகள் என்று எல்லாவற்றையும் பிரித்து பிரித்து எழுதியிருப்பது இன்னும் அழகு. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. படத்தை பார்க்க தூண்டும் அருமையான விமர்சனம் ...

    ReplyDelete
  5. இதுவரை வந்து வந்து போகி இரண்டு முறை படிச்சிட்டேன் சகோ..ஆனால் பின்னூட்டம் போடதான் நேரம் கிடைக்கவில்லை..இங்க படம் ரிலிஸ் ஆகிருந்தாலும் இன்னும் பார்க்க டைம் கிடைக்கல.பார்த்தவுடன் படத்தை பற்றி சொல்றேன்.மற்றபடி விமர்சனம் கலக்கல்.நன்றி.

    ReplyDelete
  6. அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உள்ள ஒரு சராசரி இளஞ்சன் உங்களை போன்றோர்தான் நானும். நீங்கள் உங்கள் சமூக மற்றும் அரசியல் ஆர்வங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சிந்திக்கவும் இணையத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன். படித்து பாருங்கள். கருத்து பரிமாற்றம் மூலம் உங்களை சந்திக்க நேர்ந்தமைக்கு மகிழ்ச்சி. my email- tmaran35@gmail.com. thank you.

    ReplyDelete