Sunday, December 23, 2012

முன்று உலக சினிமா : Russian Ark (2002)/Citizen Kane (1941)/Cinema Paradiso (1988)

போன வாரம் பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு இருக்கும் போது "உலக தரம் சினிமா & சாதனையாளர்கள் - ஒரு பார்வை" என்கிற பக்கத்தை பார்க்க நேர்ந்தது. எப்பொழுதாவது எழுதும் இவர்கள் சில நல்ல திரைப்படங்களை நேர்த்தியாக அறிமுக படுத்தி வருகிறார்கள். அந்த பக்கத்தில் இருந்து நான் பார்த்த/ரசித்த திரைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்போம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------  
ரஷ்யன் ஆர்க் (Russian Ark) 2002 ஆம் ஆண்டு வெளி வந்த வரலாறு சார்ந்த ரஷ்ய மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் அலெக்ஸாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov) . இந்த படம் பொருளாதார அடிப்படையில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் இது ஒரு சாதனை திரைப்படமாக கருதப்படுகிறது. 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரே கேமராவின் மூலம் ஒரே ஷாட் (shot) இல் எடுக்கப்பட்டது (Steadycam Sequence Shot ). ஒரே ஷட்டில் படம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படம் எடுபவர்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும். இரண்டு டேக்கள் தொழில்நுட்ப தவறினால் தடைபட, முன்றாவது டேக் 96 நிமிடங்களில் ஓகே செய்ய பட்டது.

நடிகர்கள், துணை நடிகர்கள் என 2000 பேர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். 3 இசை குழுவினர் இசை அமைத்துள்ளனர். ரஷ்யாவின் St .Petersburg இல் இருக்கும் குளிர்கால அரண்மனை (Winter Palace) இல் முழு படபிடிப்பையும் நடத்தியுள்ளார் இயக்குனர். படம் ஒரே நாளில் படமாக்க பட்டது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த திரைப்படத்துக்கு பின்னால் எவ்வளவு பெரிய கடின உழைப்பு இருக்கிறது என்று. அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் இடம் பிடித்தது. கதை என்று பார்த்தல் படத்தில் அவ்வளவு சுவாரிசியம் இருக்காது, படம் கொஞ்சம் போர் தான், இந்த படம் ரஷியாவின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள நமக்கு பேர் உதவி செய்யும். படம் பார்க்கும் முன்பு ரஷிய கலாச்சாரத்தை/வரலாற்றை பற்றி நிறைய கிரௌண்ட் வொர்க் பண்ணி இருக்க வேண்டும். நான் அது மாதிரி எதுவும் செய்யாமல் படத்தை பார்த்தனால் எனக்கு நிறைய காட்சிகள் புரியவில்லை. மீண்டும் ரஷிய வரலாற்றை படித்து விட்டு படத்தை பார்க்க வேண்டும். என்னை பொறுத்த வரை புதிய முயற்சி காரணமாக உலக சினிமா வரலாற்றில் இந்த திரைப்படத்துக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. 
------------------------------------------------------------------------------------------------------------------------------
Citizen Kane (சிட்டிசன் கேன்) - 1941 வது வருடம் வெளிவந்த ஆங்கில திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் ஓர்சன் வெல்ஸ். உலகின் மிகச்சிறந்த 10௦ படங்களில் சிட்டிசன் கேன் இருக்கும் என்பது பல சினிமா ஆய்வாளர்களின் கருத்து. இத்திரைப்படத்தின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை போன்றவை அக்காலத்தில் மிக சிறந்ததாக கருதப்பட்டது. இந்த திரைப்படத்தில் தான் முதன் முறையாக ஒளிப்பதிவுகளில் ஒரு வகையான "deep focus" என்ற முறையை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளனர். தூரத்தில் இருக்கும் ஒரு பொருள் கூட தெளிவாக தெரியும் அளவுக்கு இந்த ஒளிப்பதிவு இருக்கும். கதைப்படி ஒரு பத்திரிக்கையின் சொந்தக்காரரும் பெரும் செல்வந்தருமான சார்லஸ் போஸ்டர் கேன் (Charles Foster Kane) என்பவர் இறக்கும் தருவாயில் ரோஸ்பட் (Rosebud) என்று கூறி இறந்து விடுகிறார். 

பத்திரிக்கை ஆசிரியரான தொம்சன் (Thompson) என்பவர் கேன் உடைய சொந்த வாழ்க்கை பற்றியும் அவர் கூறிய கடைசி வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதையும் அறிய முயற்சி செய்கிறார். இதற்காக கேன் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் தேடி கண்டுபிடித்து விசாரணை செய்கிறார். இறுதியில் அவர் கண்டு பிடித்தாரா இல்லையா என்பது திரைப்படத்தின் முடிவு.இந்த திரைப்படம் 1942 ஆம் வருடம் ஆஸ்கார் விருதில் 9 துறைகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்கான விருதை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

சரி, அந்த ரோஸ்பட் (Rosebud) என்பது என்னவாக இருக்கும்? கேன் தான் சின்ன வயதில் வைத்து விளையாடிய ஒரு பனி சறுக்கு பலகையின் பெயர் தான் ரோஸ்பட். அவர் தனது சிறு வயது வாழ்க்கையை நினைத்துக்கொண்டே உயிர் நீத்தார் என்பதையே இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த உலக சினிமா வரிசையில் "சிட்டிசன் கேன்" படத்திருக்கு நிச்சியம் ஒரு இடம் உண்டு. உலக சினிமாவை விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது.

எனக்கு மிகவும் பிடித்த உலக சினிமா வரிசையில் "சிட்டிசன் கேன்" படத்திருக்கு நிச்சியம் ஒரு இடம் உண்டு. உலக சினிமாவை விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது. படம் பார்த்த உடன், இப்படத்தின் தாக்கம் உங்களிடம் குறைந்தது ரெண்டு நாட்கள் இருக்கும் , கண்டிப்பாய் உங்கள் குழந்தை பருவம் உங்களுக்கு ஞாபகம் வரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------- 
சினிமா பேரடிசோ (Cinema Paradiso) - 1988 ஆம் ஆண்டு வெளி வந்த இத்தாலிய மொழி திரைப்படம். இதன் இயக்குனர் குஸாப்பே டோர்ணடோர் (Guiseppe Tornatore). நாம் சின்ன வயதில் நமது ஊர்களில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்ததை மறக்க முடியுமா....அது போல தான் இந்த படமும். ஒரு சினிமா இயக்குனர் தான் சின்ன வயதில் வாழ்ந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸ் மற்றும் அதில் ஆபரேட்டராக வேலை செய்த ஒரு பெரியவர், இவர்களது ஆழ்ந்த நட்பு இவற்றை பற்றி சொல்லும் ஒரு கவித்துவமான திரைப்படம் தான் சினிமா பேரடிசோ. 

இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு சிறந்த வேற்று மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது, BAFTA விருது, கேன்ஸ் திரைப்பட விழாவில் Grand Prix Jury விருது போன்றவற்றை சேர்த்து இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. Empire Magazine தரவரிசைப்படி உலக சினிமாவின் சிறந்த 100 படங்களில் 27 வது இடத்தில் இத்திரைப்படம் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் திரைஅரங்குகளுக்கு போக ஆள் இல்லாததால் அவை இடிக்கப்பட்டு கல்யாண மண்டபம், வணிக வளாகம் என்று கட்டி கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் சின்ன வயதில் நாம் திருவிழா திரையில் பார்த்த திரைப்படங்கள், டூரிங் டாக்கீஸ் திரைப்படங்கள் இவைகளை மறக்க முடியுமா....இன்றும் அதையெல்லாம் Facebook பக்கத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு தானே இருக்கிறோம். 
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜஸ்ட் ஷேரிங் ஒரு செய்தி: இணையத்தில் என்னுடன் நெருக்கமாக பழகும் சில நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்த செய்தி தான். இருந்தாலும் சொல்கிறேன், நான் பணி புரியும் கம்பெனியின் தலைமையிடம் அமெரிக்காவில் "சான்-டியாகோ" என்கிற இடத்தில உள்ளது. நான் இங்கு இந்தியாவில் ஆணி புடுங்கும் அழகை பார்த்து, நீங்கள் ஏன் இங்கு வந்து அதே "ஆணியை" புடுங்க கூடாது என்று கேட்டார்கள். சரி என்று நானும் ஒத்து கொள்ள, அதற்கான பணிகளை தான் கடந்த ஆறு மாதம் காலமாக செய்து வந்தேன். ஆப்பர் லெட்டர், யு.எஸ் விசாவிருக்கு தயார் ஆவது என்று வாழ்கை மிகவும் பிஸியாக சென்றது. போன வாரம் தான் ஒபாமாவின் ஆட்கள் பெரிய மனது பண்ணி L1 (Inter Company Transfer) விசா அனுமதி குடுத்தார்கள். அடுத்த மாதம் யு.எஸ் சென்று விடுவேன். 

நீங்கள் பயபடுவது போல், நான் யு.எஸ் சென்ற உடன் அமெரிக்கா காரன், ரோட்டுல எச்சி துப்ப மாட்டான், காரை ரோடு மேல தான் ஒட்டுவான், சிக்னலில் காரை நிறுத்துவான் என்று இந்தியாவையும் அமெரிக்காவை கம்பேர் செய்து பதிவு எழுதி உங்களை வதைக்க மாட்டேன். இப்பொழுது செய்வதை தான் அங்கு சென்றும் செய்வேன். 
------------------------------------------------------------------------------------------------------------------------------



Friday, November 23, 2012

The Attacks Of 26/11(2012) - 7 நிமிட முன்னோட்டம்

எனக்கு மிகவும் பிடித்த பாலிவுட் டைரக்டர் "ராம் கோபால் வர்மா"  மும்பை 26/11 தாக்குதல்களை மைய படுத்தி "The Attacks Of 26/11" என்கிற பெயரில் ஒரு திரைபடத்தை எடுத்து உள்ளார். படத்தின் ட்ரைலரை வெளியிடாமல், படத்தின் முதல் 7 நிமிட காட்சிகள் வெளியிட்டு உள்ளார். யூ ட்யூப் வீடியோ காண கிடைக்கிறது. ராம் கோபால் வச்சா குடுமி, செரச்சா மொட்டை என்கிற ரீதியில் படம் எடுப்பார். அவரின் ஒன்று படம் செம கிளாஸ் ஆக இருக்கும் உ.தா (சர்க்கார்-1, உதயா, ரத்தசரித்திரம்-1) , இல்லை படு மொக்கையாக யாருமே பார்க்க முடியாத படி இருக்கும் (ஷோலே ரீமேக் ஆக்). The Attacks Of 26/11 எந்த மாதிரியான படம் என்பதை 7 நிமிட முன்னோட காட்சிகளை கொண்டு என்னால் யூகிக்க முடியவில்லை.

நானா பட்டேகர் மும்பை தாக்குதல்களை விவரிக்கும் படி படம் ஆரம்பிக்கிறது. இந்திய படகு ஒன்று வழி தவறி பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைந்து விடுவது போன்ற காட்சி ஒன்று வருகிறது. அங்கு உதவி கேட்டு ஒரு பாகிஸ்தான் படகு இந்திய படகை நோக்கி வருகிறது. அந்த பாகிஸ்தான் படகில்  இருந்தது 11 தீவிரவாதிகள் இந்திய படகில் நுழைவது போன்ற ஒரு காட்சி,அத்துடன் வீடியோ முடிவடைகிறது. தீவிரவாதிகளில் கடைசியாக இந்திய படகில் நுழைபவன் அஜ்மல் கசாப். "சஞ்சீவ் ஜெய்ஸ்வால்" என்கிற டெல்லியை சேர்ந்த டிவி நடிகர் ஒருவர் கசாப் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உள்ளார். ஹாலிவுட் போன்றே இந்தியாவிலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வருவது நிச்சியம் வரவேற்க்க தக்க விஷயமே. படம் அடுத்த மாதம் ரிலீஸ். படத்தை காண மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.

ட்ரைலர் காண: 



Tuesday, November 06, 2012

IT ACT SECTION 66 A- தேவை சில மாற்றங்கள்.

முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு, அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.
===================================================================================

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில்,
நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு”
என்று இன்று இந்து தினசரியில் அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்
இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக 
வலியுறுத்தியுள்ளது.
===================================================================================
  • இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில்மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும்என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையேபறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்குவேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.
  • இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
  •  முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
===================================================================================

Marx Anthonisamy அவர்களின் பேஸ் புக் ஸ்டேட்ஸ்.அவரின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.....
"நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளுக்கு அப்பால் நீதிமன்றத்தையும் நாம் கடைசி வரை பயன்படுத்த வேண்டியுள்ளது என சமாதானம் செய்து கொண்டு அடுத்த பொது நல வழக்கை நாஙாகள் தொடுத்துள்ளோம். தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் அந்த 66 a பிரிவு, அதை வைத்துத்தானே கார்தி சிதம்பரம் போன்ற ப'பெரிய கைகள்' கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்க முயல்கின்றன. அதை ரத்து செய்ய வேண்டுமென ஒரு வழக்கை நாளை தொடுக்கிறோம். வழக்கறிஞர் ரஜினிதான் அந்த வழக்கையும் நடத்துகிறார்."
===================================================================================
ட்விட்டர்,பேஸ் புக், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,
"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"
நன்றி!
===================================================================================
வேண்டுகோள்:
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!


Thursday, November 01, 2012

Skyfall- 2012- Bond is Back. திரைவிமர்சனம்

Skyfall இந்த வருசத்துல நான் ரொம்பவே எதிர்பார்த்த படம். ஜேம்ஸ்பாண்ட் படம் வேற. இன்னைக்கு தான் ரிலீஸ் ஆச்சு. படம் என்னோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சதா என்றால், நிச்சியம் பூர்த்தி செஞ்சது என்று சொல்வேன். இது வரை வெளிவந்த உள்ள 23 பாண்ட் படங்களை தரவரிசை படுத்தினால் Skyfall படத்திருக்கு முதல் 5 இடங்களில் நிச்சியம் ஒரு இடம் உண்டு. ஆக்ஷ்ன், செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம், மெல்லிய நகைச்சுவை என்று பல பரிமாணங்களில் படம் பயணம் செய்கிறது. முன்னாடியே சொன்ன மாதிரி இந்த படம் போன ஜேம்ஸ்பாண்ட் படமான Quantum of Solace தொடர்ச்சியாக இல்லாமல், புது கதைகளத்தை கொண்டு உள்ளது. படம் இஸ்தான்புல் நகரில் ஆரம்பித்து, லண்டன் சென்று, பிறகு ஷாங்காய், மறுபடியும் லண்டன் பயணம் செய்து கடைசியில் ஸ்காட்லாந்து நாட்டில் Skyfall என்ற வீட்டில் முடிவடைகிறது.


இங்கிலாந்து நாட்டின் உளவு அமைப்பான MI6 (Military Intelligence, Section 6) மீதும் அதன் தலைவர் மிஸ் M மீதும் முன்னால் MI6 ஏஜென்ட் ஒருவன் தொடுக்கும் தாக்குதலை மிஸ் M பாண்டின் உதவியுடன் எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படத்தின் ஒன் லைனர். இந்த படம் வழக்கமான எல்லா பாண்ட் பார்முலாவையும் கொண்டுள்ளது. படத்தின் ஆரம்பம் அட்டகாசமாய் இருக்கும். முதல் சேசிங் காட்சி இது வரை எந்த பாண்ட் படங்களிலும் வந்திராத காட்சி. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வில்லன் ஒருவன் MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் ஒன்றை திருடி கொண்டு ஓடுவான். பாண்ட் அவனை துரத்தி செல்வது போன்ற காட்சி. டின்டின் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பைக்/ஜீப் சேசிங் காட்சி வருமே. அது போன்ற, இல்லை இல்லை அதை விட அட்டகாசமான காட்சி இது. அதில் ஸ்பீல்பெர்க் அனிமேஷன் கொண்டு அந்த காட்சியை எடுத்து  இருந்தார். ஆனால் இதில் சாம் மெண்டஸ் நிஜ மனிதர்களை கொண்டு மிக சிறப்பாய் எடுத்து உள்ளார். நான் இது வரை  பார்த்த சிறந்த சேசிங் காட்சிகளில் இதுவும் ஒன்று, சில இடங்களில் எனது ஹார்ட் பிட் தாறுமாறாக ஏறி விட்டது. முதல் 15 நிமிடங்கள் மிஸ் செய்யாமல் பாருங்கள்.


MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் வில்லன் ஜேவியர் பார்டெம் (Javier Bardem) கைகளுக்கு போகிறது. அதை கொண்டு ஜேவியர் சில ரகசிய ஏஜென்ட்களை கொலை செய்கிறான். லண்டனில் இருக்கும் MI6  தலைமை அலுவலகத்தில் M இல்லாத நேரம் பார்த்து குண்டு வெடிப்பை ஏற்படுத்துகிறான். ஜேவியர் லட்சியம் உளவு துறை தலைவர் M மை கொல்ல வேண்டும் என்பது தான். அதுவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கொல்வது இல்லை, M மை லண்டனில் வைத்து அனைவரும் அறியும் படி கொலை செய்ய வேண்டும். ஜேவியர் ஏன் M மை கொலை செய்ய துடிக்கிறான் ? M முன்னால் MI6 ரகசிய ஏஜென்ட் ஜேவியர்க்கு செய்த துரோகம் என்ன ? போன்ற கேள்விக்கான விடைகளை Skyfall படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


டேனியல் க்ரெய்க், மறுபடியும் தான் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்து உள்ளார். இவரது முந்திய இரண்டு பாண்ட் படங்களை விட இதில் மிகவும் சிறப்பாக நடித்து உள்ளார். முகத்தை எப்பொழுதும் இறுக்கமாக வைத்து இல்லாமல், நிறைய இடங்களில் மாறுபட்ட முகபாவனைகளை அழகாக வெளி படுத்தி உள்ளார். பழைய பாண்ட் படங்களை போல் இல்லாமல் இதில் நிறைய புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை டயலாக்ஸ் வருகிறது. க்ரெய்க் தனக்கு காமெடியும் வரும் என்று நிருபித்து உள்ளார். ஆக்சன் காட்சிகளில் வழக்கம் போல் பட்டைய கிளப்பி உள்ளார். நோலன் படம் போல், இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உபயோக படுத்தாமல் ரியல் டைம் ஆக்சன் கட்சிகளாக படம் ஆக்கி உள்ளனர். எப்பொழுதும் கிராபிக்ஸ் காட்சிகள் விட ரியல் ஆக்சன் காட்சிகள் தான் ரசிகர்களை கவரும். இப்படமும் நிச்சியம் ரசிகர்கள் கவரும்.

ஜேவியர் பார்டெம், இவரது கதாபாத்திரத்தின் பெயர் சில்வா, இவர் முன்னால் MI6 ஏஜென்ட். படத்தில் இவரது அறிமுகம் சரியாய் ஒரு மணி நேரம் கழித்து வரும். இன்னும் சரியாய் சொல்ல வேண்டும் என்றால் இண்டர்வெல் (இந்தியாவில் மட்டும்) முடிந்த உடன் தான் இவரின் அறிமுக காட்சி வரும், மொத்தமே 30 நிமிடங்கள் தான் வருவார், அதில் 20 நிமிடங்கள் சண்டை காட்சிகள். இவரது பெர்பார்மான்ஸ் காட்சிகள் என்று சொன்னால் மொத்தமே ரெண்டு காட்சிகள் தான். இவரும் பாண்டும் சந்திக்கும் காட்சி ஒன்று, மற்றொன்று இவரும் M மும் சந்திக்கும் காட்சி. மனிதர் இந்த இரண்டு காட்சிகளில் அசத்தி இருப்பர். அதுவும் இவர் பாண்ட் உடன் நடத்தும் உரையாடல்கள் அதகளம். டைரக்டர் இவரது கதாபாத்திரத்தை உருவாக்கும் போது டார்க் நைட் ஜோக்கர் கதாபாத்திரத்தை மனதில் வைத்து உருவாக்கி இருப்பர் போல். ஜோக்கர் அளவுக்கு புத்திசாலியாக இவரை காட்டி இருப்பார்கள். இவர் பாண்டிடம் மாட்டி பிறகு தப்பிக்கும் காட்சிகள் TDK போலவே இருந்தன.


M ஆக நடித்து இருப்பவர் ஜூடி டென்ச். M16 உளவு துறை தலைவர் M ஆக GoldenEye படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் இந்த படத்தில் முடிவடைகிறது. படத்தின் மெயின் கதை இவரை சுற்றியே பின்ன பட்டு இருக்கும். தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்து உள்ளார். பாண்டிடம் இவர்கண்டிப்பு காட்டும் காட்சிகள் யதார்த்தமாய் இருக்கும். மறுபடியும் பணியில் சேர பாண்ட் சில டெஸ்ட் மேற்கொள்ள வேண்டியது வரும், அந்த எபிசோடில் M மற்றும் பாண்ட் இடையே நடைபெறும் உரையாடல்கள் செமையாக இருக்கும். Q கதாபாத்திரத்தை பென் விஷ்ஷா என்ற இளைஞர் ஏற்று நடித்து உள்ளார். அணைத்து படங்களிலும் Q  தான் ஜேம்ஸ்பாண்ட்க்கு நவீன ஆயுதங்களை வழங்குவர். படத்தின் முக்கியமான தருணங்களில்தான் க்யூ தலைகாட்டுவார். பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில் க்யூ தலைகாட்டுவதே இல்லை என்று கூட சொல்லலாம்.

கடைசியாக பாண்ட் கேர்ள்ஸ் நோமி ஹாரிஸ், மற்றும் Berenice Marlohe, இவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சில இடங்களில் திரைக்கதையில்  தொய்வு ஏற்படுகிறது, MI6 ரகசிய ஏஜென்ட்களின் லிஸ்ட்டை தீடிர் என்று அனைவரும் மறந்து விடுகிறார்கள். இது போன்ற சில குறைகள் இருக்க தான் செய்தன, ஆனால் ஜேவியர் க்ரெய்க் மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்த குறைகளை மறக்க அடித்து விடுகின்றன. படத்திருக்கு ஒளிப்பதிவு ரோஜர் டீகின்ஸ், கிளைமாக்ஸ் காட்சியில் இவரது உழைப்பு நன்றாக தெரியும். மனிதர் அசத்தி இருப்பார். கிளாசிகல் டைரக்டர் சாம் மெண்டஸ் பாண்ட் ரசிகர்களை ஏமாற்றாமல் நல்லதொரு பாண்ட் ஆக்சன் படத்தை வழங்கி உள்ளார். 

Skyfall: Bond is Back....

My Rating: 8.0 .........


Wednesday, October 31, 2012

Skyfall-(2012) ஜேம்ஸ்பாண்ட் வயசு 50.

மார்ச் மாசம் "எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012" அப்படிங்கிற பேருல ஒரு பதிவு எழுதினேன். அதுல இந்த வருஷத்துல நான் ரொம்பவே எதிர்பார்க்கிற "The Dark Knight Rises" மற்றும் "Skyfall" படத்தை பத்தி ரொம்பவே சின்ன லெவல்ல எழுதி இருந்தேன். TDKR அட்டகாசமா போன ஜூலை மாசம் ரிலீஸ் ஆச்சு. நோலன் என்னோட எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செஞ்சுட்டார். நான் பார்த்த சிறந்த படங்கள் வரிசையில் TDKR நிச்சியம் ஒரு இடம் உண்டு. இப்ப Skyfall, ஜேம்ஸ்பாண்ட் படம். ஏனோ பதிவுலகம் இந்த படத்தை TDKR அளவுக்கு கண்டுக்கவே இல்ல. TDKR படத்துக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்க காரணம் பேட்மேன் சீரீஸ்ல அதற்க்கு முன்னால வந்த TDK முக்கிய காரணம். ஆனா Skyfall முன்னால வந்த ஜேம்ஸ்பாண்ட் படமான Quantum of Solace செமையாக சொதப்பி இருந்தது. நவீன காலத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எனக்கு சுத்தமாய் பிடிக்காமல் போன படம் Quantum of Solace தான். 


நவீன காலத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பம் 1995 வருடத்தில் இருந்தது தான் தொடங்கியது. அதாவது பியர்ஸ் பிராஸ்ன ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க ஆரம்பித்த பிறகு வந்த பாண்ட் படங்களை நவீன ஜேம்ஸ்பாண்ட் ERA என்று சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த பாண்ட் நடிகர் என்றால் அது பியர்ஸ் பிராஸ்ன தான். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாய் பொருந்தினார் பியர்ஸ். பியர்ஸ் பிராஸ்ன மொத்தம் 4 பாண்ட் படங்களில் நடித்து உள்ளார் (GoldenEye, Tomorrow Never Dies, The World is Not Enough, Die Another Day). எல்லாமே அட்டகாசமான பாண்ட் படங்கள். பாண்ட் படங்கள் அனைத்தும் ஒரே பார்முலாவை கொண்டவையாக இருக்கும். முதல் 15 நிமிடங்கள், செமையான சாகச காட்சி அல்லது சேஸிங் காட்சியுடன் படம் ஆரம்பிக்கும். சேஸிங் முடிந்த உடன் ஜேம்ஸ் பாண்டின் தீம் மியூசிக் ஒலிக்க பாண்ட் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும், டைட்டில் சாங் கண்டிப்பாய் மிக பிரபல பாப் பாடகி ஒருவர் பாடி இருப்பார். 

அடுத்து பாண்ட்க்கு ப்ராஜெக்ட் அசைன்மென்ட் நடைபெறும், உளவு துறையின் தலைவரான மிஸ் M தான் பாண்ட்க்கு ப்ராஜெக்ட் அசைன் பண்ணுவார். முன்பு அசைன்மென்ட் என்றால் ரஷ்யாவின் அணு குண்டு தயாரிப்பை தடுத்து நிறுத்துவது, அல்லது உலக அழிவிற்க்கு வித்திடும் ஆராய்ச்சியை தடுத்து நிறுத்துவது. இப்பொழுது அந்த அசைன்மென்டில் தீவிரவாதிகளை ஒழிப்பதும் சேர்ந்து விட்டது. பாண்ட் தனக்கு குடுக்க பட்ட அசைன்மென்ட்டை எப்படி முடிக்கிறார் என்பது தான் அணைத்து பாண்ட் படங்களில் இருக்கும் கதை. படத்திற்கு படம் இந்த அசைன்மென்ட் மட்டும் மாறும். ஏனோ இது வரை இவர்கள் பின் லேடன்  உயிரோடு இருந்த காலத்தில் அவரை வம்புக்கு இழுத்தது இல்லை. அதுவும் இல்லாமல் இவர்கள் கியூபாவையும் சீன்டியது இல்லை. காரணம் பாண்ட் அமெரிக்க உளவாளி இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.


பியர்ஸ் பிராஸ்னக்கு பிறகு பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்றவர் டேனியல் க்ரெய்க். இவரை பாண்ட் ஆக ஏற்றுக் கொள்வதில் பெரிதும் தயக்கம் இருந்தது. முந்தைய பாண்ட் நடிகர்களுடன் ஒப்பிடப்பட்டு நிறைய விமர்சனங்கள் எழுந்தன. எந்த எக்ஸ்பிரஷன் இவர் முகத்தில் காட்ட மாட்டார் என்பது தான் குற்றச்சாற்று. எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான முக எக்ஸ்பிரஷன் காட்டுவார் என்று பலர் சொன்னார்கள். ஆனால் இவரது முதல் பாண்ட் படமான "கேஸினோ ராயல்" வந்த உடன் அணைத்து விமர்சனங்களும் நொறுங்கி போயின. இது வரை வந்த பாண்ட் பாடங்களில் அணைத்து வசூல் சாதனையை இந்த படம் முறியடித்து. அது மட்டும் அல்லாது நல்ல கிரிடிக் ரேட்டிங் வேறு கிட்டியது. IMDB ரேட்டிங் 7.9. இது தான் பாண்ட் பாடங்களின் அதிகபட்ச ரேட்டிங் என்று நினைக்கிறன். எனக்கு மிகவும் பிடித்த பாண்ட் படமும் இது தான். 

அடுத்து பாண்ட் படமான "Quantum of Solace" சிலும் டேனியல் க்ரெய்க் தான் நடித்தார். இந்த படம் "கேஸினோ ராயல்" படத்தின் தொடர்ச்சியாக வெளி வந்தது. கேஸினோ ராயல் படத்தில் தனது காதலியை கொன்றவர்களை பாண்ட் பழி வாங்க புறப்பட்டு விட்டார் என்பது போல் கதையை அமைத்து இருப்பார்கள். திரைக்கதையில் மிகவும் சொதப்பி இருந்தார்கள். படத்தில் க்வான்ட்ம் என்ற அமைப்பை பற்றி துப்பு துலக்க ஜேம்ஸ் பாண்ட் சில நாடுகளுக்கு செல்வார். ஏழை நாடுகளை சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு சுரண்டுகின்றன என்பதை படத்தில் காட்டும் விதம் கொடூரமாக இருக்கும். படத்தின் முடிவும் மிகவும் மொக்கையாக இருந்தது. பாக்ஸ் ஆபீஸில் நன்றாகவே வசூல் செய்தது. ஆனால் பாண்ட் ரசிகர்களுக்கு க்வான்ட்ம் பெரிய ஏமாற்றமே.

Skyfall Trailer:

இப்பொழுது, அதாவது நாளை வெளி வர இருக்கும் பாண்ட் படம் Skyfall. இந்த படம் Quantum of Solace படத்தின் தொடர்ச்சி கிடையாது. புதிய கதைக்களம். இந்த படம் வழக்கமான பாண்ட் பார்முலாவை கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். முதல் 10 நிமிட சேஸிங்/சாகச காட்சி துருக்கியின் இஸ்தான்புல்லில் எடுத்து உள்ளார்கள். 10 நிமிட காட்சியை படமாக்க பட குழுவினர்க்கு முன்று மாதங்கள் பிடித்தன. நான் மிகவும் எதிர்பார்க்கும் காட்சி இது. அடுத்து என்னோட பெரிய எதிர்பார்ப்பு படத்தின் வில்லன் Javier Bardem, இவரு யாருனா No Country for Old Men படத்துல சைக்கோ கொலைகாரனாக மிரட்டின ஆண்டன் சிகுரு. மனுஷன் பார்வையிலே பயம் காட்டுவார், இதுல அவரோட நடிப்பை நான் ரொம்பவே எதிர்பார்கிறேன். ஸ்கைஃபால்’ படத்துக்கு யதேச்சையாக நிறைய பெருமைகள் சேர்ந்து கொண்டன. முதல் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’ வந்த 1962ஐ கணக்கிட்டால் 50 ஆண்டுகள் ஆகி ஜேம்ஸ்பாண்டின் பொன்விழா ஆண்டாகி விட்டது 2012. இது பாண்ட் சீரீஸ்ல வர 23 வது படம். அப்புறம் படத்தோட டைரக்டர் சாம் மெண்டஸ், இவர் இது வரைக்கும் எடுத்தது எல்லாமே கிளாசிகல் படங்கள் தான். அமெரிக்கன் பியூட்டி படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்கார். ஆக்சன் படமே எடுத்தது இல்லை. இவரோட முத ஆக்சன் படமே பாண்ட் படமா அமைஞ்சது பெரிய ஆச்சிரியம். இவர் என்ன மாதிரியான பாண்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சாரா என்பதை நாளைக்கு படம் பார்த்திட்டு வந்து சொல்லுறேன்.
படத்தோட பிரிமியர் ஷோ பார்த்தவங்க குடுத்த IMDB ரேட்டிங் 8.4. சோ..எதிர்பார்ப்பு இன்னும் ஜாஸ்தியாய் இருக்கு..


Monday, October 22, 2012

ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன ?

ராஜன் லீக்ஸ் (rajanleaks) என்கிற பெயரில் ட்வீட்ஸ் எழுதி வரும் ட்விட்டர்/பிளாக்கர் மற்றும் சரவணகுமார்  என்கிற  நிஃப்ட் (NIFT) சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சைபர் க்ரைம் போலீஸ்சாரால் இன்று கைது செய்ய பட்டு உள்ளார். ராஜன் அவினாசியை சேர்ந்தவர். எனக்கு மிகவும் பிடித்த பிளாக்கர் மற்றும் ட்விட்டர். இவர்கள் இருவரையும் சேர்த்து  மொத்தம் ஆறு பேர் மீது பிரபல பின்னணி பாடகி சின்மயி சுமத்திய  குற்றச்சாற்றின் காரணமாக கைது செய்ய பட்டு உள்ளார்கள். அவர்கள் சின்மயி பற்றி அவதுறு பரப்பினார்கள் என்பது தான் குற்றச்சாற்று. பெண்களைத் தொந்திரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன. இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் சின்மயி சொல்லிய கருத்துக்கு  ராஜன் மற்றும் சில ட்விட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அதன் தொடர்விளைவாக மோதல் முற்றியது. சின்மயி மற்றும் ராஜன் இருவரிடையே நடந்து கருத்து மோதல்களை ஆரம்பத்தில் இருந்தது பார்த்து வருவதால், யார் மீது தப்பு என்ற பஞ்சாயத்தின் உள்ளே போக விரும்ப வில்லை. ஆனால் இந்த குற்றச்சாற்று மற்றும் அதன் பின்விளைவுகள்குறித்த எனது கருத்தை மட்டும் பதிவு செய்வது தான் இந்த பதிவின் நோக்கம். 

இணையம்: முக்கியமாக பேஸ் புக், மற்றும் ட்விட்டர் நமக்கு நிறைய கருத்து சுதந்திரத்தை வழங்கி உள்ளது. எந்த அளவுக்கு என்றால் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரை வாயுக்கு வந்த படி வசை பாடும் அளவுக்கு, நாட்டின் பிரதமரை கண்டபடி அசிங்கமாய் கேலி பேசும் அளவுக்கு நமக்கு கருத்து சுதந்திரம் வழங்க பட்டு இருப்பதாய் நினைத்து கொள்கிறோம். இந்த மாதிரி இணைய சுதந்திரம் நமக்கு கடந்த இரண்டு வருடங்களாய் (இணைய அசுர வளர்ச்சிக்கு பின்பு) தான் கிடைத்து இருக்கிறது, அதற்க்கு முன்பு நமக்கு இந்த கருத்து சுதந்திரம் இருந்ததா என்றால் பதில் தெரியாது. நிஜமாய் எனக்கு தெரியாது. இந்த இணைய சுதந்திரம் நமக்கு தீடிர் என்று வழங்க பட்டது, இல்லை இல்லை, அந்த இணைய சுதந்திரத்தை நாமாக எடுத்து கொண்டோம். ஆனால் அந்த சுதந்திரத்தின் அளவு கோல் நம்மில் பலருக்கு சரியாக தெரியவில்லை. எந்த அளவுக்கு ஒருவரை பற்றி தரை குறைவாய் பேசுவது, எந்த அளவு ஒருவரை விமர்சனம் செய்வது என்கிற வரைமுறை நம்மில் பலருக்கு தெரியாது. கனிமொழி பற்றி, ராகுல்காந்தி பற்றி, கலைஞரை பற்றி, ஜெயலலிதா பற்றி அசிங்கமாய் எழுதும் பலருக்கு இருக்கும் ஒரே தைரியம் அவர்கள் யாரும் அதை படிக்க மாட்டார்கள் என்பது தான். தப்பி தவறி அவர்கள் யாராவது படித்து விட்டால் ராஜன்க்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும் என்பது என் கருத்து. ஒருவரை பற்றி இணையத்தில் கண்டபடி பேசி ஈஸியாக தப்பிக்க முடியாது என்று இப்பொழுது நிரூபணம் ஆகி உள்ளது. தவறாக பேசினால் அதற்கான பலனை அவர் எதிர் கொள்ள தான் வேண்டும். 

ராஜன் மற்றும் அவரது சில நண்பர்கள் எல்லை மீறி போய் போய் உள்ளதாக சின்மயி குடுத்த சில ஸ்க்ரீன் ஷாட்ஸ் 


இந்த ட்வீட்ஸ் எழுதியவர்கள் கண்டிப்பாய் பகடிக்கு  எழுதியது போல் தெரியவில்லை. நிறைய ட்வீட்ஸ் மிகவும் கீழ்த்தரமாக எழுதி உள்ளார்கள். பெண் தானே என்ன செய்து விட முடியும் என்கிற சிந்தனை தான் மேலோங்கி இருக்கிறது. பல ட்வீட்ஸ் ஆபாசத்தின் உச்சம். இதே போன்ற தாக்குதல் சாதாரண ஒரு ஆள் மீது தொடுக்க பட்டு இருந்தால், அவர் வாயை முடி கொண்டு அமைதியாக இருந்தது இருப்பார். ஆனால் ஒரு பிரபலத்தின் மீது அவர் பார்வையில் படும் படி இப்படி ட்வீட் செய்தால் கண்டிப்பாய் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். 

நிறைய பேர் அவன், அப்படி எழுதுறான், இவன் கிசுகிசு எழுதுறான் என்று சொல்கிறார்கள், என்னை பொறுத்த வரை அவர்கள் அசிங்கமாய் எழுதியதை சம்பந்த பட்டவர் படித்தால், அதுவும் சம்பந்தபட்டவர் பிரபலமாக இருந்தால் இது தான் நடக்கும். கண்டிப்பாய் சைபர் க்ரைமில் தான் புகார்  குடுபார்கள். அதை தான் சின்மயியும் செய்து உள்ளார்கள். சரி பிரச்சினை கை மீறி போய் விட்டதால், சில ட்வீட்டர்ஸ் எடுத்த ஆயுதம், சின்மயி தமிழர்களை பற்றியும், தமிழ் மீனவர்களையும் இழிவாக பேசினார் என்கிற குற்றச்சாற்றை சின்மயி மீது சுமத்தினார்கள்.


சின்மயி மீனவர்களை பற்றி தவறாக பேசியதாக கூறப்படும் ட்வீட் இது தான்..
"மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" - சின்மயி
ராஜன் மற்றும் சில ட்விட்டர்ஸ் இதை எப்படி திரித்து கூறி உள்ளார் என்றால் "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம் -(எக்ஸ்ட்ரா பிட்டிங்)" இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது..


"மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" என்ற இந்த வசனம் 'இந்து' என்.ராம் பேசுவதாக 'வினவு' இணையத்தில் 2009ல் வெளியாகிய 'என் ராமாய ணம்' என்ற வீதி நாடகப் பிரதியில் வருகிறது. இந்த கருத்தை தான் சின்மயி கூறினார் என்று சொல்லி இருக்கிறார்கள்..

அதற்கு விளக்கம் குடுத்து சின்மயி வெளியிட விளக்க பதிவு, மற்றும் ஸ்க்ரீன் ஷாட் .


ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது ராஜன் தரப்பு நண்பர்கள் சின்மயிடம் சமாதானம் பேச முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆல்தோட்டபூபதி (@thoatta) என்கிற ட்விட்டரின் சமாதான முயற்சி. நண்பர்களால் இது தான் செய்ய முடியும். அவர்கள் முயற்சி வெற்றி பெற்று ராஜன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வெளியே வர வேண்டும்.

தோட்டா அவர்களுக்கு சின்மயி தாயார் குடுத்த பதில் கீழே.

@selventhiran @thoatta @chinmayi உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன் அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா. இங்கு தோட்டா அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர் எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார். திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ? 

ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும். 

எங்கள் பொறுமையை இயலாமை என்றுதானே மிதித்தார்கள்? Please read my tweet reply to @itisprashanth.

நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன். 

வேறு ஒருவரின் சமாதான முயற்சிக்கு சின்மயி தாயார் T.Padmhasini ‏@Padmhasini  குடுத்த பதில் இங்கே.

இதை பார்க்கும் போது எனக்கு கவுண்டர் காமெடி தான் ஞாபகம் வருகிறது. "தாய் மாமன்" படம் என்று நினைக்கிறன். சம்பந்தமே இல்லாமல் கவுண்டரும் சத்யராஜும் மணிவண்ணன் வீடு வாசலில் நின்று சத்தம் போடுவார்கள், மணிவண்ணன் வெளியே வந்த உடன் கவுண்டர் பம்பி போய் " ஆளை பார்க்காத வரைக்கும் தாங்க சவுண்ட் விடுவோம், ஆள பார்த்தா சாத்திக்கிட்டு போயிடுவோம்" என்று சொல்லுவது தான் ஞாபகம் வருகிறது.


Friday, September 28, 2012

தாண்டவம் (2012)- மிஸ் ஆன ருத்ரதாண்டவம்

கல்லூரி முடித்த பிறகு பல வருடங்கள் கழித்து இன்று தான் ஒரு படத்திருக்கு FDFS (முதல் நாள் முதல் காட்சி) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் டாக்டர் சியான் விக்ரம் நடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் "தாண்டவம்". படத்திருக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனேன். படம் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டல் ஓர் அளவு பூர்த்தி செய்தது என்றே சொல்வேன். அது என்ன ஓர் அளவு..?? சில காட்சிகள், சூப்பராகவும், சில காட்சிகள் சுமாரகவும், சில காட்சிகள் மொக்கையகவும் இருந்தன. இதை நல்ல படம் என்று கொண்டாட முடியாது, மொக்கை என்று ஒதுக்கவும் முடியாது. சுமார் லிஸ்டில் சேர்க்கலாம். கதை லண்டனில் ஆரம்பித்து, இந்தியா வந்து, இறுதியில் லண்டனில் முடிகிறது.


போன வாரம் தாண்டவம் படத்தின் மீது "கதை திருட்டு" வழக்கு ஒன்றை ஒரு உதவி இயக்குனர் போட்டதாய் செய்தி படித்தேன். அதனால் படம் வெளி ஆவதில் சிக்கல் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் அந்த வழக்கு பற்றிய எந்த ஒரு சுவடும் வெளியில் தெரியாமல், இன்று வெற்றிகரமாக படம் வெளியானதில் எனக்கு பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்த வரை அரசியலில் ஊழலை எப்படி ஒழிக்க முடியாதோ, அதே போல் சினிமாவில் "கதை திருட்டு"/ஹாலிவுட் படத்தின் தழுவல், போன்றவற்றை ஒழிக்கவே முடியாது. எப்படி ஊழலுடன் வாழ பழகி, அதை சர்வசாதாரணமாக எடுத்து கொள்கிறேனோ, அதே போல் தழுவல்களையும் ஈசியாக எடுத்து கொள்ள பழகி விட்டேன். படத்தின் மூலத்தை தேடி அலைந்து எனது நேரத்தை விரயம் செய்யாமல், படம் நன்றாக இருந்தால் ரசிப்பது, மொக்கையாக இருந்தால் மறந்து விடுவது என்று இருக்கிறேன். இப்பொழுது தாண்டவம் படத்தின் கதை சுருக்கத்தை பார்போம்.

படம் லண்டன் நகரில் ஆரம்பிக்கிறது. லண்டன் நகரில் 2011 வருடம் ஜனவரி 1 ஆம் தேதி காலை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. பல பேர் உயிர் இழக்கிறார்கள். அமெரிக்காவின் செப்டம்பர் -11 போன்ற தாக்குதல் என்று மீடியாக்கள் கூறுகின்றது. குண்டு வெடித்த சரியாய் ஒரு வருடம் கழித்து நகரில் வெவ்வேறு இடங்களில், ஒரே மாதிரி முன்று கொலைகள் நடைபெறுகிறது. கொலைகளை பற்றி துப்பறிய லண்டன் போலீஸ் அதிகாரியாக "வீர கத்தி" என்கிற இலங்கை தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் நாசர் அறிமுகம் ஆகிறார். ஒரு கட்டத்தில் கொலைகளை செய்வது கண் பார்வை அற்ற "கென்னி" (விக்ரம்) என்று தெரிய வருகிறது. கென்னி தனது நான்காவது கொலையை அரங்கேற்றம் செய்யும் வேலையில், படத்தில் இடைவேளை வேண்டி, போலீஸ் கென்னியை சூழ்ந்து கொள்கிறது. இடைவேளை முடிந்ததும் வழக்கம் போல  கென்னி போலீஸ்ஸிடம் இருந்தது தப்பித்து விடுகிறார். 


பிறகு என்ன பிளாஷ்பேக் தான். பிளாஷ்பேகில் கென்னியின் உண்மையான பெயர் சிவகுமார் என்று நமக்கு தெரிகிறது. இந்தியாவின் ரா அமைப்பின் முக்கிய ஆபிசர்  விக்ரம். அவருக்கும் அனுஷ்காவிற்கும் கிராமத்தில் கல்யாணம் நடக்கிறது. விக்ரம் ஏன் இந்தியாவில் இருந்தது லண்டன் வந்தார்..?? ஏன் பெயரை கென்னி என்று மாற்றி கொள்கிறார் ..?? ஏன் கொலை செய்கிறார்..??அவரது கண் பார்வை எப்படி பறி போனது..?? முதல் காட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கும் விக்ரமிருக்கு என்ன சம்பந்தம் ?? குண்டு வைத்து யார்..?? இது போன்ற கேள்விக்கான விடையை அறிய விரும்புவார்கள் "தாண்டவம்" படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக முன்று மாதம் வெயிட் செய்தால் விஜய் டிவியில் படத்தை போடும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Human Echolocation
விக்ரம்- வழக்கம் போல் இந்த படத்திலும் தனது முழு உழைப்பை வாரி வழங்கி உள்ளார். ஒரு துளி கூட குறை சொல்ல முடியாத நடிப்பு. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் நடிப்பதில் கமலுக்கு அடுத்து தமிழ் திரையுலகில் விக்ரம் தான் என்று கண்ணை முடி சொல்வேன். பார்வை அற்ற கேரக்டரில் விக்ரம் கன கச்சிதமாய் பொருந்துகிறார். கண் தெரியாமல் மனித எதிரொலி இடமாக்கம் (Human Echolocation)என்கிற டெக்னிக் முலம் எதிராளிகளை அடித்து விழுத்துக்கிறார். கண் பார்வை இல்லாதவர்கள் ஒலி எழுப்பி அதில் வரும் ரெஸ்பான்ஸ் வைத்து எதிரில்  யார் இருக்கிறார்கள், என்ன இருக்கிறது என்று அறிந்து அதன் படி நடப்பது தான்  Echolocation டெக்னிக். விக்ரம் இந்த டெக்னிக் முலம் எதிரிகளை வீழ்த்தும் காட்சிகள் நம்பும் படியாக உள்ளன. நிறைய இடங்களில் விக்ரமின் முதுமை, மற்றும் கழுத்தில் சுருக்கம் நன்றாகவே தெரிகிறது. 

அனுஷ்கா- பிளாஷ்பேகில் விக்ரமின் ஜோடியாக வருகிறார். இவருக்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. காட்சிகளும் ரொம்பவே குறைவு தான். இவரும் முத்தின பீஸ் மாதிரி தான் தெரிந்தார். விக்ரம்மிற்கு ஏற்ற ஜோடி. லண்டன் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்து உள்ளார். இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது போல, நிறைய காமெடி மொக்கை ரகம், சில "பேஸ் புக்" ஜோக்ஸ் வேறு உபயோகித்து உள்ளார். சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் எடுத்தது போல் எனக்கு தெரிந்தது. லண்டன் அழகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சும்மா ஒரு பாடலுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்டு உள்ளார். சிறிது நேரம் பார்வை இல்லாத விக்ரமை லவ் செய்கிறார், அவ்வளவே. ஜெகபதி பாபு விக்ரமின் நண்பராக வருகிறார்.


G.V பிரகாஷின் சில பாடல்கள் ஏற்கனவே மதராசபட்டினம் படத்தில் கேட்ட மாதிரி இருந்தது. பின்னணி இசையும் அவ்வளவு ஈர்க்கவில்லை, சுமார் ரகம் தான். 
ஒளிப்பதிவு பல இடங்களில் கண்ணுக்கு குளுர்ச்சி. இயக்குனர் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் குடுக்க வேண்டும் என்று தான் நினைத்து படத்தை எடுத்து உள்ளார். கதையும் அது போல் தான், ஆனால் நிறைய ட்விஸ்ட் என்னால் யூகிக்க முடிந்தது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாய் வந்து இருக்கும்.

தாண்டவம்- ருத்ர தாண்டவம் ஆகி இருக்க வேண்டியது, ஆனால் ஜஸ்ட் மிஸ்.


Monday, September 24, 2012

இந்திய சினிமா- அறியாத "முதல் முதலில்" சாதனைகள்

முதல் முதலில் சாதனைகள் என்றுமே மகத்தானவை, நினைவை விட்டு அகலாதவை. முதல் முதலில் நிலவில் கால் பதித்த "நீல் ஆம்ஸ்ட்ராங்கை" யாராவது மறக்க முடியுமா ? முதல் முதலில் Mt.எவரெஸ்டில் கொடி நட்டிய  டென்சிங் நோர்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரியை அவ்வளவு சீக்கிரம் மறக்க தான் முடியுமா ? அதே போல் நமக்கு தெரியாத பல முதல் சாதனைகள் இந்திய சினிமாவில் நிகழ்த்த பட்டு உள்ளன. நான் மிகவும் நேசிக்கும் இந்திய சினிமாவில் சில முதல் முதலில் சாதனைகளை பார்போம்........

இந்தியாவின் முதல்இயக்குநர்கள்:
ஹீராலால் சென் மற்றும் ஹரிச்சந்திர சக்ராம் படவேத்கர் (சாவே தாதா என்று அறியப்பட்டவர்). இருவரும் புகைப்படக் கலைஞர்கள்.
H.S அவர்களின் முதல் செய்தி படம்
சென், மேடை நாடங்களை 1898 இலிருந்து படமாக்கத் தொடங்கினார். அவர் ராயல் பயாஸ்கோப் கம்பெனி என்ற பெயரில் இந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்தான் இந்தியாவின், பார்க்கப் போனால் உலகின் முதல் முழுநீளப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படத்தை 1904 இல் உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது. என்றாலும் அந்தப் படத்தின் பிரதி கிடைக்கவில்லை. அவரது படைப்புகள் அனைத்தும் தீவிபத்தால் முற்றிலும் அழிந்துபோயின. நவம்பர் 1899 இல் படவேத்கர் பாம்பே தொங்கும் தோட்டத்தில் குத்துச்சண்டை ஒன்றைப் படமாக்கினார். வாட்சன் ஹாஸ்டலில் இந்தியாவின் முதல் திரையிடல் 1896 ஜூலை 7 இல் நடந்தபோது அவர் அங்கு இருந்தார். இந்தியாவின் முதல் செய்திப்படம் என்று கருதப்படும் இங்கிலாந்தி லிருந்து டிசம்பர் 1901 இல் இந்தியா திரும்பும் பாம்பே மாகாண கல்வித்துறை அமைச்சர் ஆர்.பி.பரஞ்சிப்பியின் வருகையையும் 1903 வருடம் கல்கத்தா நகரத்தில் நடைபெற்ற கிங் எட்வர்ட் VII அவர்களின் முடிசூட்டு விழாவில் கர்சன் பிரபு என்கிற பிரிட்டிஷ் வைஸ்ராயயை படம் பிடித்தார். 

முதல் திரைப்படத் தயாரிப்பாளர்:
ஜாம்ஷெட்ஜி ப்ராம்ஜி மதன் என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தியேட்டர் கலைஞர் தனது எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் வரிசையாக நிறைய குறும்படங்களைத் தயாரித்தார். அதுதான் பின்னாளில் மதன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய தோற்றமாக 1918 இல் பரிணமித்தது. கல்கத்தாவில் ஒரு டெண்ட் கொட்டகையில் தனது படங்களை 1902 முதல் மதன் திரையிடத் தொடங்கினார். புதிதாகத் தோன்றி பெரிய அளவில் வளர்ந்து வந்த திரைப்படத் தொழிலின் வளர்ச்சியை உணர்ந்துகொண்ட அவர், தனது கம்பெனியை பரவலாக கொண்டு சென்றார். அது மௌனப் பட சகாப்தத்தில் ஒரு முதன்மையான சக்தியாக இருந்தது. இவர்தான் முதன் முதலில் திரைப்படத் தயாரிப்பு என்பதையும் தாண்டி, விநியோகம் மற்றும் கண்காட்சிக்கு வைத்தல் என்று விரிவுபடுத்தியவர். 
இந்தியாவின் முதல் திரைப்பட நிறுவனத்தை அவர் கல்கத்தாவில் நிறுவினார். வங்காளத்தின் முதல் வணிகரீதியான முழுநீள மௌனப்படமான பில்வமங்கள் என்ற படத்தை மதன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அப்படம் 1919 நவம்பர் 11 இல் கார்ன்வாலிஸ் தியேட்டர் என்ற திரையரங்கில் ஓடத் தொடங்கியது.அந்தப் படம் 10 ரீல்களைக் கொண்டது. 

முதல் திரையரங்கம்:
இந்தியாவின் முதல் திரையரங்கம் 1907 இல்ஜே.எஃப். மதனால் கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் கதைப் படம் :
இந்தியாவின் முதல் கதைப் படமான புந்தலிக்,மே 19, 1912 இல் வெளியிடப் பட்டது. அதன் நீளம் 12 நிமிடங்கள்தான். இப்படம் மகாராஷ்டிராவின் துறவி ஒருவரைப் பற்றியது.

இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் :
ராஜா ஹரிச்சந்திரா படத்தில் ஒரு காட்சி
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்க படும் "தாதாசாகே பால்கே" அவர்களின் "ராஜா ஹரிச்சந்திரா" (1913 மே 3 ஆம் தேதி) தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படம் பம்பாய் கோரனேஷன் சினிமாட்டோகிராஃப்  என்ற  அரங்கில் வெளியானது. இப்படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள், அந்த காலத்தில் சினிமாவில் நடிப்பதருக்கு பெண்கள் முன்வர வில்லை. அதனால பால்கே அவர்கள் ஆண் நடிகர்களை பெண் வேடம் இட்டு, படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களையும் படம் ஆக்கினர். படம் மக்களுக்கு காட்ட படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பாக (21 ஏப்ரல்)  பம்பாயின் மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் பல செய்தித்தாள்கள் ஆசிரியர்களுக்கு,  பாம்பே ஒலிம்பியா சினிமாவில், இப்படத்தின்  3,700 அடி நீள முன்னோட்டக் காட்சிக்கு தாதா சாஹேப் பால்கே ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தியத் திரையில் முதல் பெண்கள்:
துர்காபாயும் அவரது மகள் கமலாபாய் கோகலேயும் தாதா சாஹேப் பால்கேயின் இரண்டாவது படமான மோகினி பஸ்மசூர்(1914) என்ற படத்தில் நடித்தனர்.

முதல் வெற்றித் திரைப்படம் :
பால்கே இயக்கிய லங்கா தகன் (1921) முதன்முதலில் வசூலில் வெற்றி கண்ட படம். அது பாம்பே கிர்காம் என்ற இடத்திலுள்ள வெஸ்ட் எண்டு சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. 23 வாரங்கள் ஓடியது.

தடை செய்யப்பட முதல்இந்தியப் படம்:
பாம்பே கோஹினூர் ஸ்டூடியோஸ் தயாரித்த பகத் விதூர் (1921). ஸ்டுடியோவின் உரிமையாளர் துவாரகா தாஸ் நரந்தாஸ் சம்பத்தே அப்படத்தின் பிரதான வேடத்தில் நடித்தார். அதில் அவர் மகாத்மா காந்தி போன்ற தோற்றத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக அப்படத்தை சென்சார் தடை செய்தது. இருப்பினும் வேறு சில மாநிலங்களில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.

முதல் திரைப்படத் தணிக்கைக் குழு :
1920 இல் பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ரங்கூனில் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிறகு லாகூரில் 1927 இல் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 

இந்தியாவின் முதல் திரை நட்சத்திரம் :
பேஷன்ஸ் கூப்பர். அவர் மதன்ஸ் ஆஃப் கல்கத்தா தயாரித்து, ஜ்யோதிஷ் பந்தோபாத்யாய் இயக்கிய நளதமயந்தி (1920) என்ற படத்திலும் ஏராளமான பிற படங்களிலும் நடித்தார்.
முதல் சமூக நையாண்டிப் படம்:
தீரேன் கங்கூலி
பிலேத் பேராட் (இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர், 1921, வங்க மொழிப்படம்). தயாரித்து நடித்தவர் தீரேன் கங்கூலி. இந்தப் படம் காதல் மற்றும் கிழக்கத்திய -மேற்கத்திய முரண்பாடு ஆகியவற்றைக் கையாண்ட சமூகத் திரைப்படங்களுக்கு முன்னோடி. தீரேன் கங்கூலி அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்க படும் மிக உயரிய விருதான "தாதாசாகே பால்கே" விருது மற்றும் "பத்ம பூஷன்" விருது பெற்றார். 
முதல் சரித்திரப் படம்:
சிங்காகாத் 1923,  பாபுராவ் பெயிண்டர் இயக்கியது. இதுதான் இந்தியாவின் முதல் முழு நீள வரலாற்றுத் திரைப்படம். இப்படம் சக்கரவர்த்தி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு பெண் தயாரித்த முதல் இந்தியப் படம்:
புல்புல்- எ- பரிஸ்தான்(1926). இயக்குநர்: ஃபாத்மா பேகம்.

நில உரிமை பற்றிய முதல் படம்:
நீரா (1926). இந்தப் படம் ஆர்.எஸ்.சவுத்திரியால் இயக்கப்பட்டது. மெஹபூப் கான் இப்படத்தில் அவரது உதவியாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் நிலவுரிமைப் பிரச்சனைப் பற்றிய விரிவானப் பார்வையுடன் ரொட்டி (1942)  என்ற படத்தை இயக்கினார்.

முதல் தேவதாஸ் படம் :
நரேஷ் மித்ரா இயக்கி, பானி பர்மா நடித்த தேவதாஸ் (1928). ஒளிப்பதிவு: நிதின் போஸ். அனுராக் காஷ்யப்பின் தேவ் டி உட்பட, இந்தக் கதை மொத்தம் 12 முறை வங்காளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டிருக்கிறது.

முதல் ரவீந்திரநாத் தாகூர் திரைத் தழுவல்:
நாவல் காந்தி இயக்கிய பலிதான் (1927). இப்படம் தாகூர் 1887 இல் எழுதிய நாடகமான பிசர்ஜனை அடிப்படையாகக் கொண்டது. தாகூரே இதை படமாக்க விரும்பி குழந்தை என்ற பெயரில் திரைக்கான எழுத்து வடிவமாக உருவாக்கியிருந்தார். என்றாலும் அது படமாகத் தயாரிக்கப்படவே இல்லை.

முதல் மொகலாய வரலாற்றுப் படம்:
நூர்ஜகான் (1923). இது மதன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் பேஷன்ஸ் கூப்பர் நடித்தது. அனார்கலி என்ற உருது நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இம்தியாஸ் அலி தாஜ் இயக்கிய  த லவ்ஸ் ஆஃப் அ மொகல் பிரின்ஸ் (1928) என்ற படம் மற்றொரு மொகலாயர் காலத்து வரலாற்றுப் படமாகும்.

சிவாஜி பற்றிய முதல் முக்கியப் படம்:
உதய் கல்(1930). மராத்திய வரலாற்றில் சிவாஜியை முக்கியமான ஒருவராகக் காட்டுவதற்கு இப்படம் பெருமளவு தாக்கம் தந்தது என்று சாந்தாராமே சொல்கிறார். மற்றொரு மராத்திய சினிமா முன்னோடியான பால்ஜி பெந்தர்கர், சிவாஜி பற்றிய பல படங்களை, சத்திரபதி சிவாஜி (1952) மற்றும் பவன் கிந்த்(1956) போன்ற படங்களைத் தந்தார்.

முதல் முத்த காட்சி
முதல் திரை முத்தம்:
எ த்ரோ ஆப் டைஸ் என்ற படத்தில் நடித்த சாரு ராயும் சீதா தேவியும் முதன்முதலாக திரையில் முத்தமிட்டுக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் திரைப்படத்தில் முத்தத்துக்குத் தடை இல்லை. 1933 இல் வெளியான கர்மா என்ற படத்தில் நிஜ வாழ்வில் தம்பதியரான ஹிமான்ஷு ராயும் தேவிகா ராணியும் தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு முத்தமிட்டுக் கொண்டனர்.

இந்தியத் திரையின் முதல் கவர்ச்சி நடிகை:
பதிபக்தி (1922) என்ற படத்தில் நடித்த இத்தாலிய நடிகை சினோரின்னா மனெல்லி. தயாரிப்பு மதன் தியேட்டர்ஸ். சினோரின்னா உடல்பாகங்கள் வெளியில் தெரியும் வண்ணம் மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மறுதணிக்கை செய்ய வேண்டி வந்தது. கதாநாயகி பேஷன்ஸ் கூப்பர்.


இந்தியாவின் முதல் பேசும்படம்:
ஆலம் ஆரா
இந்தியாவின் முதல் பேசும்படம்: மார்ச்14, 1931 இல் வெளியான, இம்பீரியல் மூவிடோன்சின் ஆலம் ஆரா (ஓடும் நேரம் : 124 நிமிடங்கள்). இப்படம் மதன் தியேட்டர்சின் ஷிரின் ஃபர்ஹாத் என்ற படத்தை திரையில் தோல்வியுறச் செய்தது. ஆலம் ஆராவில் பாடல், நடனம் இசை ஆகியவை இடம்பெற்று இந்தியாவின் முதல் வணிகரீதியான படமாக நிலைத்து விட்டது. ஆலம் ஆரா ஒரு வெற்றி பெற்ற பார்சி நாடகமாகும். அர்தேஷிர் இரானி இதை தழுவி இந்தியாவின் முதல் பேசும் படமாக்கினார். படத்தின் பாடல்களுக்கான ட்யூன்களையும் பாடகர்களையும் அவரே தேர்வு செய்தார். பாடல்களுக்கு தபலா, ஹார்மோனியம் மற்றும் வயலின் ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டன. ஆலம் ஆரா இந்தியாவின் முதல் திரையசைப் பாடல்களை அளித்தது என்றாலும் படத்தின் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.தேதே குதா கே நாம் பர் பியாரே, தாக்கத் ஹை கர் தேனே கி என்ற பாடலின் மூலம் இந்திய சினிமாவின் முதல் பாடகரானார் டபிள்யூ.எம்.கான். படத்தின் முதல் இசைத்தட்டு 1934 இல் தான் வெளிவந்தது. 


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில பேசும் படம்: கர்மா(1933). இயக்கம்: ஹிமான்ஷு ராய். லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச் பெவிலியனில் திரையிடப்பட்ட இப்படம் ஆங்கில பத்திரிகைகளால் வெகுவாகப் புகழப்பட்டது. ஒரு நாளிதழ் எழுதியது: "தேவிகா ராணி பேசும் ஆங்கிலத்தைக் கேளுங்கள், இத்தனை அழகான உச்சரிப்பை நீங்கள் கேட்டிருக்கமுடியாது.’’

இந்தியத் திரையில் முதல் ஆங்கிலப் பாடல்:
"Now the Moon Her light Has Shed" என்று தேவிகா ராணி கர்மா (1933) படத்துக்காகப் பாடிய பாடல். இசை அமைத்தவர் எர்னெஸ்ட் ப்ராதர்ஸ்ட்.

முதல் தமிழ் பேசும்படம்: 

 ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய காளிதாஸ். 1931 அக்டோபர் 31 ஆம் நாள் வெளியிடப்பட்டது. வசனம் தமிழிலும் பாடல்கள் தெலுங்கிலும் அமைந்தன.வணிக ரீதியாக இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது.Rs.8000 பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட  படம்,  Rs.75000 மேல் வசூலில் தாண்டியது. பட சுருள் சென்னை கொண்டுவரப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து, நறுமணப்பத்தி ஏற்றி பட சுருளை வழிபட்டனர். இப்படத்தில் தான் "சினிமா ராணி" என்று அழைக்கப்படும்  T. P. ராஜலக்ஷ்மி அறிமுகம் ஆனார், இவர் தான் பிற்காலத்தில் முதல் தமிழ் பெண் இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆனார்.
முதல் மலையாள பேசும்படம்எஸ்.நோதானி இயக்கிய பாலன்(1938).
முதல் கன்னட பேசும்படம்: பக்த துருவா (1934), எனினும் சதி சுலோச்சனாதான் முதலில் வெளியானது.

முதல் தெலுங்கு பேசும்படம்: ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய, பக்த பிரகலாத்(1931).


முதல் மலையாள முழுநீளத் திரைப்படம்:  
ஜே .சி.டேனியல் இயக்கிய, விகதகுமாரன்(1928).

முதல் மராத்தி மொழி பேசும்படம்: அயோதியாச்சே ராஜா (1932), வி.சாந்தாராம் இயக்கியது.

முதல் வங்காள மொழி பேசும் படம்:
அமர் சவுத்ரி இயக்கிய, ஜமாய் சாஷ்தி(1931). இப்படம் ஆலம் ஆரா வெளியாகி ஒரு மாதத்துக்குப் பின் ஏப்ரல் 11, 1931 இல் வெளியானது.

 முதல் அஸ்ஸாமியத் திரைப்படம்:
ஜாய்மதி (1935), ஜோதிப்ரசாத் அகர்வாலா இயக்கியது.

ஹாலிவுட் தாக்கத்தில் உருவான முதல் இந்தியப் படம்:
இந்திராமா (1934). கிளாரன்ஸ் பிரவுன்'ஸ் ஃப்ரீ சோல் (1931) என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல். அந்த காலத்திலே தழுவல்களை ஆரம்பித்து விட்டார்கள்.

முதல் வண்ணப்படம்:
கிசான் கன்யா
கிசான் கன்யா(1936), ஆதர்ஷ் இரானியின் இம்ப்பீரியல் மூவிடோன் தயாரிப்பில், மோடி கிட்வானி இயக்கியது. சாடட் ஹசன மண்டோ அவர்களின் நாவலை தழுவி எடுக்க பட்ட படம் தான் கிசான் கன். . வி சாந்தாராம் அவர்களின் சைரந்த்ரி (1933) என்கிற மராத்தி மொழி திரைபடத்தில் சில வண்ண காட்சிகள் இடம் பெற்றன, ஆனால் சைரந்த்ரி படதில் இடம் பெற்ற வண்ண காட்சிகளை ஜெர்மனியில் உருவாகினார்கள். ஆனால் கிசான் கன் திரைபடத்தில் இடம் பெற்ற வண்ண காட்சிகள் இந்தியாவிலே தயார் செய்யப்பட்டன. அதனால தான் முதல் இந்திய வண்ண படம் என்ற பெருமையை கிசான் கன் பெற்றது.
முதல் பின்னணிப் பாடல்: மேஸ்ட்ரோ ராய் சந்த் போரல், தூப் சாவோன் (1935)  என்ற படத்தில் முதன்முதலாக பின்னணிப் பாடும் முறையை அறிமுகப் படுத்தினார். " மே குஷ் ஹோனா சாஹூ" என்ற அந்தப் பாடலை பாருல் கோஷ் மற்றும் சர்கார் ஹரிமதியுடன் பெண்கள் குழுவினர் பாடியிருந்தனர்.
இந்திய அளவில் வெற்றிபெற்ற முதல் மெட்ராஸ் தயாரிப்பு :
எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா (1948).

கேன்ஸ் விருதை வென்ற முதல் இந்தியப் படம்:
நீச்சா நகர் (1946). இயக்கம்: சேத்தன் ஆனந்த். இப்படம் சமூக உண்மை நிலையினை மிக அழகாக படம் பிடித்து காட்டியது. சமூகத்தில் ஏழை மற்றும் பணக்காரர் இடையே இருக்கும் இடைவெளியை பற்றி பேசும் படம் இது. இப்படம் 1946 ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச  கேன்ஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்படத்திருக்கான" விருதை தட்டி சென்றது.
1954 இல் பிமல் ராயின் "தோ பீகா ஜமீனுக்கு" கேன்சின் சிறப்புப் பரிசு கிட்டியது. 

ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் படம்:
மெஹபூப் கான் இயக்கிய, மதர் இந்தியா (1957).


ரித்விக் கட்டக்கின் அறிமுகம்:
நாகரிக்(1952). தனிச்சிறப்பு கொண்ட திரைக் கலைஞ ரான ரித்விக் கட்டக், ரசிகர் கள் மற்றும் தயாரிப்பாளர் களால் தன் வாழ்நாள் முழுதும் அவதிக் குள்ளானவர். இதனால் அவரது படைப்புகள் பல முழுமை பெறாமலேயே போயின. என்றாலும் தனது 20  வருட திரைப்பயணத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்ததோடு திரையுலகை ஆட்சி செய்த வணிகப்படங்களுக்கு ஒரு சரியான மாற்றாகவும்  விளங்கினார் அவர். இந்திய சினிமா பிதாமகர்களின் வரிசையில் அவருக்கென்று தனித்த , நிலையான இடம் உண்டு.
சிவாஜி கணேசனின் அறிமுகம்: 
பராசக்தி (1952),இப்படத்துக்கு வசனங்கள்  மு.கருணாநிதி எழுதினார்.இதில் சிவாஜி பேசிய வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றன.

சத்யஜித் ரே அறிமுகம்:
பதேர் பாஞ்சாலி (1955),உலக சினிமா வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்தது இப்படம். எந்த முறையில் பட்டியலிட்டாலும் உலகின் சிறந்த திரைக்கலைஞர்களில் ஒருவராக தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருபவர் ரே. சினிமா ஊடகத்தின் உண்மையான ஆசானான சத்யஜித் ரே, பலகலைகளில் தேர்ந்த படைப்பாளியாவார். அவர் இந்திய சினிமாவுக்கு உலக அளவில் உரிய அங்கீகாரம் தேடித் தந்தார்.

வணிக ஹிந்தி சினிமாவை மாற்றியமைத்த மூவர் குழுவின் எழுச்சி:
ராஜ்கபூர், திலீப்குமார் மற்றும் தேவ் ஆனந்த். இன்குலாபில் (1935)  அறிமுகமானபோது ராஜ்கபூருக்கு வயது 11. நீல்கமலில் (1947) மது பாலாவுக்கு ஜோடியாக கதாநாயகன் வேடத்தில் அவர் நடித்தார். 1948 இல் ஆர்.கே. பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதே ஆண்டில் ஆக் என்ற படத்தை இயக்க வும் செய்தார். திலீப்குமார்,  ஜ்வர் பாதா(1944)  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தேவதாஸ்(1955) மற்றும் மொகலே ஆசாம் (1960) உள்ளிட்ட முத்திரை பதித்த படங்களில் நடித்தார். பிரபாத் தயாரித்த ஹம் ஏக் ஹைன் (1946)  என்ற படத்தின் மூலம் தேவ் ஆனந்த் அறிமுகமானார். 

ரஜினிகாந்த் என்ற அற்புதம்: கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் (1975) என்ற படத்தில் அறிமுகமானார். கமல்ஹாசன் கதாநாயக னாக நடித்த அப்படத்தில் ஒரு சிறிய வேடம். கமல் நடித்த மற்றொரு படமான மூன்று முடிச்சில் (1976) முக்கிய வேடத்தில் ரஜினி நடித்தார். பிறகு அவருக்கு இன்று வரை வெற்றிமுகம்தான்.

ராஜேஷ் கன்னா யுகம்:
அவரது முதல் படம் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஆக்ரி காத்(1966). முக்கிய வேடத்தில் அவர் நடித்த ராஸ் அவரது முதல் வெற்றிப் படம். ஆராதனா (1969) இந்த மெகா ஸ்டாரை உருவாக்கிய படம்.

அமிதாப் எழுச்சி:
கனத்த குரல் கொண்ட அமிதாபுக்கு மிருணாள் சென்னின் புவன் ஷோம் (1969) என்ற படத்தில் வர்ணனையாளராக முதல் வாய்ப்புக் கிடைத்தது. அவரது திரையில் தோன்றி நடித்த முதல் படம் கே.ஏ.அப்பாசின் சாத் ஹிந்துஸ்தானி. கோபக்கார இளைஞன் என்ற தோற்றம்  ஜஞ்சீர் (1973) மூலமே அவருக்குக் கிடைத்தது. 
கமல்ஹாசனின் முதல் படம்:

ஏ.பீம்சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மாவில் (1959) ஒரு குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்களில் (1975) தன்னை விட மூத்த வயது பெண்ணை காதலிக்கும் இளைஞனாக நடித்ததன்  மூலம் ஒரு உச்ச நட்சத்திரமாக உயர்ந்த கமல்ஹாசன், சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு (2010) வரை தனது திரைப்பயணம் முழுதும் பரிசோதனைகள் செய்துவருகிறார். தனது உள்ளார்ந்த நடிப்புத் திறன் மூலம்,  பிம்ப முத்திரைகளுக்குள் விழுந்து விடும் மற்ற நட்சத்திரங்களைப் போலல்லாமல் எந்த பிம்பத்துக்கும் சிக்காமல் அவர் தனித்து விளங்குகிறார். பலதுறை வித்தகரான கமல் தான் இயக்கம் நான்காவது படமான விஸ்வரூபத்தை முடித்து விட்டார்.


இன்னும் சில தகவல்கள்

மெர்ச்சன்ட்- ஐவரி படங்களின் தொடக்கம்:
1961. இந்தியாவில் பிறந்த இஸ்மாயில் மெர்ச்சன்ட் சிறந்த தயாரிப்பாளருக்கான ஆஸ்கார் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்  பட்டவர்(எ ரூம் வித் எ வியூ, 1986; ஹோவர்ட்ஸ் எண்ட், 1992; ரிமைன்ஸ் ஆஃப் த டே,1993).


ஹிந்தியில் டப் செய்யப்பட்ட முதல் ஹாலிவுட் படம்:
ஜுராசிக் பார்க், 1993.

இந்தியாவின் முதல் மல்டிப்ளெக்ஸ்:
பி.வி.ஆர் அனுபம்(1997).

சலீம் -ஜாவேத்தின் முதல் திரைக்கதை:
சீதா அவுர் கீதா (1972).

காப்பீடு செய்யப்பட முதல் படம்:
சுபாஷ் கையின் தால்(1999)

முதல் திகில் படம்:
ராம்சே சகோதரர்களின் தோ கஸ் ஜமீன் கே நீச்சே (1972).

நவீன சினிமா தொடக்கம்:
மிருணாள் சென்னின் புவன் ஷோம் மற்றும் மணி கவுலின் உஸ்கி ரொட்டி (1969) ஆகிய படங்கள் வருகை

தேசிய விருதுகள் உருவாக்கப்பட்ட ஆண்டு:
1954.  

தகவல்கள் உதவி: சண்டே இந்தியன், விக்கிபீடியா.