Sunday, April 29, 2012

The Great Dictator-(1940)- சாப்ளின் அட்வைஸ் ஹிட்லர்க்கு

ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்”.. இந்த வரிகள் விக்ரம் நடித்த தில் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். இந்த பாடல் வரிகளின் அர்த்தம் “The Great Dictator” என்ற படத்தை பார்க்கும் வரை எனக்கு புரியவில்லை. நமக்கு ஒரு நாட்டின் தலைவரோட (உ.த: கலைஞர், ஜெ , சோனியா) கொள்கை பிடிகலைனா என்ன பண்ணுவோம் ?? அவருக்கு நீ பண்ணுறது சரி இல்லைன்னு எப்படி சொல்லுவோம் ?? நம்மலோட எதிர்ப்பை எப்படி காட்டுவோம் ?? இப்ப இருக்குற இணைய வசதி முலம்மா நம்ப கருத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிபடுத்தலாம், எதிர்ப்பை வெளிபடுத்த நிறைய வழிகள் இருக்கு. போடியில உக்காந்துகிட்டு வைட் ஹவுஸ் ஒபாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம் நம்ப ப்ளாக்ல எழுதலாம். 

அவருக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ அத பத்தி எல்லாம் நாம் கவலை பட வேண்டியது இல்லை. கடிதம் பிடிக்கலையா திருக்குறள் மாதிரி நாளே வரியில நச்சுனு ஒரு தலைவரோட கொள்கைய கிண்டல் பண்ணி ட்விட்டர்ல ட்வீட் போடலாம். இது எல்லாம் இப்ப நம்பல மாதிரி காமன் மேன் பண்ணுறது. ஆனா ஒரு சினிமா படைப்பாளி ஒரு தலைவர் பண்ணுற செயல் பிடிகலைனா தன்னோட கருத்தை சினிமா முலமா சொல்லுவான், ஆனா அப்படி கருத்து சொல்லற படம் எல்லாம் டாக்குமெண்டரி லிஸ்ட்ல சேந்துரும். அப்படி ஒரு கிரேட் லீடர்க்கு!!!! தி கிரேட் சார்லி சாப்ளின் அட்வைஸ் செஞ்சு எடுத்த தி கிரேட் திரைக்காவியம் தான் “The Great Dictator”. அந்த தலைவர்!!!! வேறு யாரும் இல்லை, சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்ச அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler).


ஹிட்லரை பத்தி தெரியாதவங்க இருக்க முடியாது. தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம். ஹிட்லர் ஜெர்மன் நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசியல்வாதி, சாதாரண ஆட்சியாளர் கிடையாது, மிக பயங்கரமான சர்வாதிகாரி. அவர் ஆட்சி செய்த காலகட்டத்தில் அவரின் யூத எதிர்ப்பு கொள்கை காரணமாக கிட்டதட்ட 11 மில்லியன் (1.1 கோடி) பேரை கொன்ற ஒரு கொடூரன்.

 உலகையே தன் காலடியில் கொண்டு வர துடித்த கிராகதன். இரண்டாம் உலக போர் நடைபெற முக்கிய காரணமாக இருந்த ஒரு லீடர். இப்படி பட்ட ஒரு சர்வாதிகாரியை மிக பயங்கரமாக பகடி செய்து, “அடேய் நீ பண்ணுறது தப்பு, உன்னோட கொள்கைகள் ரொம்ப முட்டாள்தனமானதுன்னு” செவுட்டில் அறைந்தாற்போல் சாப்ளின் சொன்ன படம் The Great Dictator”.


இந்த படத்தில் சாப்ளின் டபுள் அக்டு பண்ணி இருப்பர். ஒரு சாப்ளின் மூடி திருத்தும் நாவிதர், இவர் ஒரு யூதர். மற்றும் ஒரு சாப்ளின் டோமானியா (ஜெர்மனி) என்ற நாட்டை ஆண்டு வரும் சர்வாதிகாரி. பெயர் ஹெயக்கல் (ஹிட்லர்). இவருக்கு யூதர்களை கண்டால சுத்தமாக பிடிக்காது. தன் நாட்டில் யூதர்கள் யாரும் இருக்க கூடாது என்று, யூதர்களை பிடித்து சிறையில் அடைக்க தன் படையை ஏவி விட்டு இருப்பார். பார்பர் (நாவிதர்) சாப்ளின் ஹெயக்கல் படையிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க ஓடி கொண்டு இருப்பார். இடையே ஹெயக்கல் பக்கத்து நாடான பாக்டீரியாவின் (இத்தாலி) சர்வாதிகாரி நபோலினியுடன் (முசோலினி) இனைந்து அடுத்த உலக போருக்கு ஆயுத்தம் ஆகி கொண்டு இருப்பார்.

பார்பர் சாப்ளின் ஹெயக்கல் படையிடம் மாட்டி சிறையில் அடைக்க பட்டு, பிறகு அங்கு இருந்து தப்பித்து ராணுவ உடையில் சுற்றி கொண்டு இருப்பார். பார்பரின் முக அமைப்பு ஹெயக்கல்(ஹிட்லர்) போல் இருப்பதால், அவரை ஹெயக்கல் என்று ராணுவ தளபதி தவறாக எண்ணி, போருக்கு தயாராகி கொண்டு இருக்கும் ஹெயக்கலின் ராணுவ படை முன்பு உரையாற்ற சொல்வார். ஆனால் யாரும் எதிர் பார வண்ணம் பார்பர் யூதர்களுக்கு ஆதரவாக, உலக போருக்கு எதிராக, சமாதானத்தை வலியுறுத்தி ஏழு நிமிட உருக்கமான உரை ஒன்றை அளிப்பார். அந்த உரை முடிய, படமும் முடிவடையும்.

            
சாப்ளின்  யூதர்களுக்கு ஆதரவாக மற்றும் ஹிட்லரை பகடி செய்து  அதுவும் ஹிட்லர் வாழ்ந்த காலத்திலே பேசும் படம் எடுத்தால் அவரை நிறைய பேர் யூதர் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் சாப்ளின் உண்மையில் யூதர் கிடையாது. யூதர்களின் கஷ்டங்களை புரிய நான் யூதராய் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு முறை சொல்லி இருக்கார்.

 நாஜி கொள்கைகளுக்கு எதிராக மற்றும் யூதர்களின் கஷ்டங்களை திரையில் பதிவு செய்த, செய்துகொண்டு இருக்கும் மற்றும் ஒரு மிக சிறந்த படைப்பாளி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். நாலு படத்துக்கு ஒரு படம் இவர் கண்டிப்பா தன்னோட நாஜி எதிர்ப்பு கொள்கைய மையமா வச்சு ஒரு படத்தை குடுத்து விடுவார்.


படத்தின் சுவாரசியங்கள் சில:
  • சாப்ளின் எடுத்த முதல் பேசும் படம். படபிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடத்த பட்டது. இந்த படம் வெளிவந்த போது அமெரிக்கா உலக போரில் ஈடுபடவில்லை. இருந்தாலும் ஹிட்லரின் கொள்கைகள் தவறானவை என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்ல வேண்டும் என்று சாப்ளின் இப்படத்தை எடுத்தார்.
  • இந்த படம் தோல்வி அடைந்த இருந்தால், சாப்ளின் நடு தெருவுக்கு வந்து இருப்பார், ஆனால் அது போல் எல்லாம் நடக்காமல் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
  • ஹெயக்கல் (ஹிட்லர்) உலகமே பயந்த சர்வாதிகாரி, ஆனால் அவன் தனியாக இருக்கும் போது, மற்றும் அவன் அலுவலகத்தில் இருக்கும் போது செய்யும் சேட்டைகள், கிறுக்குத்தனங்களை செமையாய் கிண்டல் செய்து இருப்பார் சாப்ளின். ஹெயக்கல் ஒரு காட்சியில் தன் சிலை செய்யும் சிற்பிக்கு ரெண்டே செகண்ட் மட்டும் போஸ் குடுத்து விட்டு, அந்த எடத்தை விட்டு நகர்ந்து விடுவார். சிற்பி சிலை செய்ய ஆரம்பிதற்குகள் ஹெயக்கல் அங்கிருந்து போய் விடுவார். இப்படியாக பல காட்சிகள் வைத்து ஹிட்லரை பகடி செய்து இருப்பார் சாப்ளின்.
  • இப்படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்க பட்டது. ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
இந்த படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய உலக சினிமா........

My Rating: 8.6/10......


Tuesday, April 10, 2012

Call of Juarez-(PC/Xbox360) -சபிக்க பட்ட புதையலை தேடி ஒரு பயணம்


இப்போ வரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச சினிமாவை பத்தி எழுதிகிட்டு இருந்தா நான், இப்போ அதுல இருந்து கொஞ்சம் விலகி எனக்கு பிடிச்ச வேற ஒரு விசயத்தை பத்தி எழுதலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.. முன்னாடி பதிவுல சொன்ன மாதிரி நான் ரசித்த சில வெஸ்டர்ன் வீடியோ கேம்ஸ்-ஐ உங்களுக்கு அறிமுக படுத்தற பதிவு தான் இது. இந்த பதிவுல நாம பார்க்க போற கேம் “Call of Juarez”. இந்த கேம்-ல் மொத்தம் முனு சீரீஸ் வந்துள்ளது. நாம்ப இப்போ பார்க்க போறது முத பாகம் Call of Juarez – (2007) & ரெண்டாம் பாகம் Call of Juarez: Bound in Blood - (2009)  . இந்த கேம் PC & Xbox360 ரெண்டு வெர்ஷன்ளையும் வந்துள்ளது. நான் இதோட Xbox-360 வெர்ஷன் தான் விளையாடி இருக்கேன். சரி Call of Juarez கேம் பத்தி பார்க்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் வேற சில அடிப்படையான வீடியோ கேம்ஸ் பத்தி பார்போம்.
90’s கால கட்டத்துல நிண்டெண்டோ (Nintendo) கேம்ஸ் மிக பிரபலமாக இருந்தது. 90-களின் வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கு கண்டிப்பாய் "சூப்பர் மரியோ" (Super Mario) பற்றி தெரிந்து இருக்கும். அனேக கேம்ஸ் பிரியர்கர்கள் தங்களோட கேம்ஸ் கேரியர்யை சூப்பர் மரியோ-ல இருந்து தான் ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு உறுதியா சொல்லலாம். கேம் கான்செப்ட் ரொம்ப சிம்பிள், பிச் (Peach) என்ற காளான் ராஜியத்தின் இளவரசியை ப்ரௌசர் (Bowser) என்ற டிராகன் கடத்தி சென்று விடும். காளான் ராஜியத்தில் மொத்தம் எட்டு உலகங்கள், ஒவொரு உலகமும் நாலு லெவல் கொண்டது. மரியோ என்ற கதாபாத்திரத்தை ஏற்று விளையாடும் நாம் பிச் இளவரசியை தேடி ஒவொரு உலகமாய் பயணம் செய்ய வேண்டும். அணைத்து உலகத்தின் கடைசி லெவலில் வில்லன் ப்ரௌசர் நமக்காக காத்து கொண்டு இருக்கும், அதை கடந்து நாம் இளவரசி பிச்யை காப்பாற்ற வேண்டும். ஒவொரு உலகத்திலும் ப்ரௌசர் நமக்கு பல இடைஞ்சல்களை குடுக்கும், அவற்றை எல்லாம் முறியடித்து எட்டாவது உலகத்தில் கடைசி லெவலில் இருக்கும் பிச்யை மரியோ காப்பாற்றுவது தான் கேம் கான்செப்ட். சின்ன வயசுல மரியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கேம். கேம் விளையாட ஆரம்பிச்சு கரெக்டா முனு மாசம் கழிச்சு, என்னோட எட்டாவது முழு பரீட்சை லீவுன்னு நினைக்குறேன், ஒரு மதியான நேரத்துல பிச்யை சென்று அடைதேன். உடனே ஓடி போய் என்னோட பக்கத்து வீட்டு நண்பர்களை எல்லாம்  குப்பிட்டு வந்து காமிச்சது எல்லாம் ஆட்டோகிராப் நினைவுகள். இப்ப அந்த பழைய மரியோ கேம்ஸ் பார்த்தா ஏதோ பழைய எம்ஜியார் சிவாஜி படம் பார்க்கிற மாதரி இருக்கு.

 சின்ன வயசுல ஏற்பட்ட கேம்ஸ் மீதான பிடிப்பு இன்னும் எனக்கு கொஞ்சம் கூட குறையவேயில்லை. சம்பாரிக்க ஆரம்பிச்ச அப்புறம் நான் எனக்குன்னு வாங்குன முத பொருள் Xbox-360. வாங்கி நாலு வருஷம் ஆச்சு, கிட்டதட்ட 40 கேம்ஸ் என் கிட்ட இருக்கு. அதுல எனக்கு ரொம்பவே பிடிச்ச கேம் “Call of Juarez” சீரீஸ். இது வெஸ்டர்ன் டைப் பிரஸ்ட் பெர்சன் ஷூட்டர் (FPS) கேம். சில ஷூட்டர் கேம்ஸ்ல கன் (Gun) தூக்கிட்டு எதிர்ல யாரு வந்தாலும் சுட்டு தள்ளிட்டு ஓடிட்டே இருக்க வேண்டியது இருக்கும். ஏன் சுடுறோம், எதுக்கு சுடுறோம் ஒன்னுமே நமக்கு புரியாது. ஆனா சில கேம்ஸ் ரொம்ப சுவாரிசியமான கதைய அடிப்படையாக கொண்டு இருக்கும். நமக்கு குடுக்க பட்ட மிஷனை நாம் ரொம்ப யோசிச்சு, பிளான் பண்ணி முடிக்க வேண்டியதாக இருக்கும்.. ஒரு நல்ல கேம் நம்மை அந்த கேம் கதாபாத்திரமாக மாற்றி விட வேண்டும். சரி இப்போ “Call of Juarez” எப்படி பட்ட கேம் அப்படிங்கிறதை இப்போ பார்போம்.

எப்படி ஒரு நல்ல படத்துக்கு அதோட முத சீன் முக்கியமோ, அதே போல ஒரு கேம் வெற்றி அடைய அந்த முத மிஷன் ரொம்ப முக்கியம். இந்த கேம்ல முத மிஷன் படு அமர்க்களமாய் இருக்கும். ஒரு கோட்டையில் கேம் ஆரம்பிக்கும். மிஷியன் கன் கொண்டு அந்த கோட்டைய பாதுகாத்து கொண்டு இருக்கும் வீரர்களை நாம் சுட வேண்டும். நிறுத்தாமல் சுட வேண்டும், அந்த உக்கிரமான சண்டை முடியும் தருவாயில் டக் என்று பிளாஷ்பேக். நாம் யார் ? ஏன் அந்த கோட்டைக்கு வந்தோம் ? எதற்காக அந்த சண்டை ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் 15 மிஷன்.

Juarez என்ற சுடுகாட்டில் ஒளித்து வைக்க பட்டு உள்ள தங்க புதையலை தேடி எடுப்பது தான் மெயின் கதை.கேமில் மொத்தம் ரெண்டு முக்கியமான கதாபாத்திரங்கள். பில்லி (Billy) & ரே (Ray). நாம் இரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக கேம் விளையட வேண்டும். ஒரு மிஷன்னில்
நாம் பில்லியாக விளையாடினால், அடுத்த மிஷன்னில் ரேவாக விளையாட வேண்டும். இருவரின் குணாதிசியங்கள் இதோ.
ரே: துப்பாக்கி சண்டை போடுவதில் கில்லாடி. நல்ல பலசாலி. டுயல் சண்டை போடுவதில் சூரன்.
பில்லி: இவன் அம்பு ஏய்வதில் பெரிய ஆள். ரே அளவு பலசாலி கிடையாது. மறைந்து அல்லது பதுங்கி தாக்குவதில் வல்லவன்.
ரேவின் தம்பி மகன் தான் பில்லி. ஒரு எதிர்பாரா சம்பவத்தால் ரேவின் தம்பி தாமஸ் (Thomas)கொல்ல பட்டு விடுவான். தன் தம்பியை கொன்றது பில்லி தான் என்று ரே தவறாக எண்ணி விடுவான். அந்த கொலைக்கு காரணம் தான் இல்லை என்று பில்லி எடுத்து கூறுவதை கேட்காமல் ரே பில்லியை துரத்த ஆரம்பித்து விடுவான். பில்லி ரேயிடம் இருந்து தப்பித்து புதையல் இருக்கும் Juarez நகரத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்வான். ரே பில்லியை தொடர்ந்து Juarez நகரத்தை வந்து அடைவான். தாமஸ்-ஐ கொன்ற உண்மையான கொலையாளி யார் ?? Juarez நகரத்தில் உண்மையிலே புதையல் இருந்ததா ?? முதல் காட்சியில் இருந்த அந்த கோட்டை யாருடயது ?? போன்ற பல சுவாரிசியமான கேள்விகளுக்கான விடை “Call of Juarez” PC/Xbox-360 கேமில் சொல்ல பட்டு இருக்கும்.
   
எப்பவுமே ஒரு படம் பெரும் வெற்றியடைந்தால் அதன் ரெண்டாம் பாகம் வெளி வரும். இந்த செண்டிமெண்ட்க்கு கேம்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன. Call of Juarez”- (2007) வெற்றிக்கு பிறகு “Call of Juarez: Bound in Blood - (2009) என்று இதன் ரெண்டாம் பாகம் வெளி வந்தது. முதல் பாகத்தை விட ரெண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் நல்ல மெருகேற்ற பட்டு இருக்கும். Call of Juarez” கேமில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி மற்றும் ரே & தாமஸ்யின் இளமை பருவ வாழ்கை தான் “Bound in Blood”. இந்த கேமில் ரே மற்றும் தாமஸ் எப்படி Juarez நகரத்தில் இருக்கும் சபிக்கப்பட்ட புதையலை அடைந்தார்கள் என்பது தான் மெயின் ப்ளாட். ஒவொரு மிஷன் ஆரம்பிக்கும்பொழுது நாம் நமக்கு எந்த கதாபாத்திரம் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளலாம். ஒவொரு மிஷன் முடிவில் கண்டிப்பாய் ஒரு டுயல் சண்டை இருக்கும். லெவல் ஏற ஏற சண்டை கடினம் ஆகும்.
         
Bound in Blood”-யின் பல காட்சிகள் The Good Bad and Ugly படத்தில் இருப்பது போன்று இருக்கும். அமெரிக்க உள்நாட்டு போர் நடைபெறும் காலகட்டத்தில் நடைபெறும் முதல் மிஷன் GBU படத்தில் வரும் உள்நாட்டு போர் காட்சி போன்றே இருக்கும். அது போக கேமில் வரும் மர வீடுகள், குதிரை சண்டை, டுயல் துப்பாக்கி சண்டை, பண்டி ஹண்டர் மற்றும் பேய் நகரம் (Ghost Town) கண்டிப்பாய் உங்களுக்கு நல்ல வெஸ்டர்ன் வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை குடுக்கும்.
  
நீங்க வீடியோ கேம் பிரியரா இருந்ததா கண்டிப்பா இந்த கேம் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சியமா உங்களுக்கு பிடிக்கும்.

  இந்த கேமின் முன்றாவது பாகம் “Call of Juarez: The Cartel” என்ற பெயரில் வெளி வந்து உள்ளது. நான் இன்னும் இந்த கேம் விளையாட வில்லை. வாய்ப்பு கிடைத்து விளையாடினால் கண்டிப்பாய் அதை பற்றி எழுதுகிறேன்.