Wednesday, October 31, 2012

Skyfall-(2012) ஜேம்ஸ்பாண்ட் வயசு 50.

மார்ச் மாசம் "எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012" அப்படிங்கிற பேருல ஒரு பதிவு எழுதினேன். அதுல இந்த வருஷத்துல நான் ரொம்பவே எதிர்பார்க்கிற "The Dark Knight Rises" மற்றும் "Skyfall" படத்தை பத்தி ரொம்பவே சின்ன லெவல்ல எழுதி இருந்தேன். TDKR அட்டகாசமா போன ஜூலை மாசம் ரிலீஸ் ஆச்சு. நோலன் என்னோட எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செஞ்சுட்டார். நான் பார்த்த சிறந்த படங்கள் வரிசையில் TDKR நிச்சியம் ஒரு இடம் உண்டு. இப்ப Skyfall, ஜேம்ஸ்பாண்ட் படம். ஏனோ பதிவுலகம் இந்த படத்தை TDKR அளவுக்கு கண்டுக்கவே இல்ல. TDKR படத்துக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்க காரணம் பேட்மேன் சீரீஸ்ல அதற்க்கு முன்னால வந்த TDK முக்கிய காரணம். ஆனா Skyfall முன்னால வந்த ஜேம்ஸ்பாண்ட் படமான Quantum of Solace செமையாக சொதப்பி இருந்தது. நவீன காலத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எனக்கு சுத்தமாய் பிடிக்காமல் போன படம் Quantum of Solace தான். 


நவீன காலத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பம் 1995 வருடத்தில் இருந்தது தான் தொடங்கியது. அதாவது பியர்ஸ் பிராஸ்ன ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க ஆரம்பித்த பிறகு வந்த பாண்ட் படங்களை நவீன ஜேம்ஸ்பாண்ட் ERA என்று சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த பாண்ட் நடிகர் என்றால் அது பியர்ஸ் பிராஸ்ன தான். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாய் பொருந்தினார் பியர்ஸ். பியர்ஸ் பிராஸ்ன மொத்தம் 4 பாண்ட் படங்களில் நடித்து உள்ளார் (GoldenEye, Tomorrow Never Dies, The World is Not Enough, Die Another Day). எல்லாமே அட்டகாசமான பாண்ட் படங்கள். பாண்ட் படங்கள் அனைத்தும் ஒரே பார்முலாவை கொண்டவையாக இருக்கும். முதல் 15 நிமிடங்கள், செமையான சாகச காட்சி அல்லது சேஸிங் காட்சியுடன் படம் ஆரம்பிக்கும். சேஸிங் முடிந்த உடன் ஜேம்ஸ் பாண்டின் தீம் மியூசிக் ஒலிக்க பாண்ட் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும், டைட்டில் சாங் கண்டிப்பாய் மிக பிரபல பாப் பாடகி ஒருவர் பாடி இருப்பார். 

அடுத்து பாண்ட்க்கு ப்ராஜெக்ட் அசைன்மென்ட் நடைபெறும், உளவு துறையின் தலைவரான மிஸ் M தான் பாண்ட்க்கு ப்ராஜெக்ட் அசைன் பண்ணுவார். முன்பு அசைன்மென்ட் என்றால் ரஷ்யாவின் அணு குண்டு தயாரிப்பை தடுத்து நிறுத்துவது, அல்லது உலக அழிவிற்க்கு வித்திடும் ஆராய்ச்சியை தடுத்து நிறுத்துவது. இப்பொழுது அந்த அசைன்மென்டில் தீவிரவாதிகளை ஒழிப்பதும் சேர்ந்து விட்டது. பாண்ட் தனக்கு குடுக்க பட்ட அசைன்மென்ட்டை எப்படி முடிக்கிறார் என்பது தான் அணைத்து பாண்ட் படங்களில் இருக்கும் கதை. படத்திற்கு படம் இந்த அசைன்மென்ட் மட்டும் மாறும். ஏனோ இது வரை இவர்கள் பின் லேடன்  உயிரோடு இருந்த காலத்தில் அவரை வம்புக்கு இழுத்தது இல்லை. அதுவும் இல்லாமல் இவர்கள் கியூபாவையும் சீன்டியது இல்லை. காரணம் பாண்ட் அமெரிக்க உளவாளி இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.


பியர்ஸ் பிராஸ்னக்கு பிறகு பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்றவர் டேனியல் க்ரெய்க். இவரை பாண்ட் ஆக ஏற்றுக் கொள்வதில் பெரிதும் தயக்கம் இருந்தது. முந்தைய பாண்ட் நடிகர்களுடன் ஒப்பிடப்பட்டு நிறைய விமர்சனங்கள் எழுந்தன. எந்த எக்ஸ்பிரஷன் இவர் முகத்தில் காட்ட மாட்டார் என்பது தான் குற்றச்சாற்று. எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான முக எக்ஸ்பிரஷன் காட்டுவார் என்று பலர் சொன்னார்கள். ஆனால் இவரது முதல் பாண்ட் படமான "கேஸினோ ராயல்" வந்த உடன் அணைத்து விமர்சனங்களும் நொறுங்கி போயின. இது வரை வந்த பாண்ட் பாடங்களில் அணைத்து வசூல் சாதனையை இந்த படம் முறியடித்து. அது மட்டும் அல்லாது நல்ல கிரிடிக் ரேட்டிங் வேறு கிட்டியது. IMDB ரேட்டிங் 7.9. இது தான் பாண்ட் பாடங்களின் அதிகபட்ச ரேட்டிங் என்று நினைக்கிறன். எனக்கு மிகவும் பிடித்த பாண்ட் படமும் இது தான். 

அடுத்து பாண்ட் படமான "Quantum of Solace" சிலும் டேனியல் க்ரெய்க் தான் நடித்தார். இந்த படம் "கேஸினோ ராயல்" படத்தின் தொடர்ச்சியாக வெளி வந்தது. கேஸினோ ராயல் படத்தில் தனது காதலியை கொன்றவர்களை பாண்ட் பழி வாங்க புறப்பட்டு விட்டார் என்பது போல் கதையை அமைத்து இருப்பார்கள். திரைக்கதையில் மிகவும் சொதப்பி இருந்தார்கள். படத்தில் க்வான்ட்ம் என்ற அமைப்பை பற்றி துப்பு துலக்க ஜேம்ஸ் பாண்ட் சில நாடுகளுக்கு செல்வார். ஏழை நாடுகளை சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு சுரண்டுகின்றன என்பதை படத்தில் காட்டும் விதம் கொடூரமாக இருக்கும். படத்தின் முடிவும் மிகவும் மொக்கையாக இருந்தது. பாக்ஸ் ஆபீஸில் நன்றாகவே வசூல் செய்தது. ஆனால் பாண்ட் ரசிகர்களுக்கு க்வான்ட்ம் பெரிய ஏமாற்றமே.

Skyfall Trailer:

இப்பொழுது, அதாவது நாளை வெளி வர இருக்கும் பாண்ட் படம் Skyfall. இந்த படம் Quantum of Solace படத்தின் தொடர்ச்சி கிடையாது. புதிய கதைக்களம். இந்த படம் வழக்கமான பாண்ட் பார்முலாவை கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். முதல் 10 நிமிட சேஸிங்/சாகச காட்சி துருக்கியின் இஸ்தான்புல்லில் எடுத்து உள்ளார்கள். 10 நிமிட காட்சியை படமாக்க பட குழுவினர்க்கு முன்று மாதங்கள் பிடித்தன. நான் மிகவும் எதிர்பார்க்கும் காட்சி இது. அடுத்து என்னோட பெரிய எதிர்பார்ப்பு படத்தின் வில்லன் Javier Bardem, இவரு யாருனா No Country for Old Men படத்துல சைக்கோ கொலைகாரனாக மிரட்டின ஆண்டன் சிகுரு. மனுஷன் பார்வையிலே பயம் காட்டுவார், இதுல அவரோட நடிப்பை நான் ரொம்பவே எதிர்பார்கிறேன். ஸ்கைஃபால்’ படத்துக்கு யதேச்சையாக நிறைய பெருமைகள் சேர்ந்து கொண்டன. முதல் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’ வந்த 1962ஐ கணக்கிட்டால் 50 ஆண்டுகள் ஆகி ஜேம்ஸ்பாண்டின் பொன்விழா ஆண்டாகி விட்டது 2012. இது பாண்ட் சீரீஸ்ல வர 23 வது படம். அப்புறம் படத்தோட டைரக்டர் சாம் மெண்டஸ், இவர் இது வரைக்கும் எடுத்தது எல்லாமே கிளாசிகல் படங்கள் தான். அமெரிக்கன் பியூட்டி படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்கார். ஆக்சன் படமே எடுத்தது இல்லை. இவரோட முத ஆக்சன் படமே பாண்ட் படமா அமைஞ்சது பெரிய ஆச்சிரியம். இவர் என்ன மாதிரியான பாண்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சாரா என்பதை நாளைக்கு படம் பார்த்திட்டு வந்து சொல்லுறேன்.
படத்தோட பிரிமியர் ஷோ பார்த்தவங்க குடுத்த IMDB ரேட்டிங் 8.4. சோ..எதிர்பார்ப்பு இன்னும் ஜாஸ்தியாய் இருக்கு..


23 comments:

  1. எனக்கும் பாண்ட் னா பியர்ஸ் பிராஸ்ன தான் அவர தவிர வேற யாரையும் பாண்ட் டா நெனைக்க தோணல பார்போம் நாளைக்கு உங்க விமர்சனம் எப்படி இருக்குனு பார்த்துதான் முடிவு பண்ணனும் படம் பாக்கலாம வேணாம்னு

    ReplyDelete
    Replies
    1. வாங்க சக்கர கட்டி..நீங்களும் நம்ம கட்சி தான்...

      Delete
  2. எனக்கும் Pierce Brosnan தான் பிடிக்கும் :-) நான் பார்த்த முதல் பாண்ட் என்பதால் அந்த ஈர்ப்பாக இருக்கலாம். எனது அப்பாவிற்கு Sir Sean Connery இன்று வரை அவர் வேறு எவரையும் "Bond" ஆக ஏற்றுக் கொள்ளவில்லை :-) Casino Royale கூட பரவாயில்லை, Quantum of Solace இன்னும் முழுதாக பார்க்கவே இல்லை. அவ்வளவு சுமாரான Bond Movie! SKYFALL மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது. வெள்ளி அல்லது சனி நிச்சயம் பார்த்துவிடுவேன்.

    நீங்களும் நிச்சயம் பார்த்து விடுவீர்கள்... நிச்சயம் விமர்சனம் எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல..நீங்க FB page ஆரம்பச்சிதில் இருந்தது ப்ளாக் ரொம்ப கம்மியா எழுதுறீங்க...Quantum of Solace பார்க்காம போனது நல்லது தான் தல..
      படம் பார்த்துட்டேன்.....சயந்திரம் எழுதலாம்ன்னு நினைக்கிறன்..

      Delete
  3. உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். நான் சனிக்கிழமை புக் செய்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல் இதுவரை வந்த விமர்சனங்கள் படம் நன்றாக இருப்பதாகவே சொல்கின்றன. என்னதான் நன்றாக இருந்தாலும் Pierce Brosnan நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பாஸ்...நாங்கெல்லாம் உங்களை காணம்னு கம்ப்ளைன்ட் குடுக்கலாம்ன்னு இருக்கோம், அடிக்கடி பதிவு எழுதுங்க....படம் பார்த்தாச்சு தல...கலக்கல் படம்..

      Delete
  4. நேக்கும் பியெர்ஸ் ப்ரோஸ்னன் தான் டாப்பு! செம ஹாட் பாண்ட் அவரு! ஆனா படத்தில கேசினோ ராயலை அடிச்சுக்க முடியாது! ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே நான் அதிக முறை பார்த்த படம் அதுதான்! I'm waiting.... :D

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல...நமக்கு ஒரே ரசனை... :) நீங்களும் அடிக்கடி எழுதுங்க..

      Delete
  5. Nice post mate.. Craig is the best of all bond actors IMO... I have huge expectations on Skyfall, more than TDKR. In fact I didn't like TDKR that much... hoping another good show from Craig...

    ReplyDelete
    Replies
    1. வாங்க Shareef S M A.....எனக்கு TDKR ரொம்பவே பிடிச்சு இருந்தது...Skyfall உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்....மிஸ் பண்ணாதீங்க..

      Delete
  6. நமக்கெல்லாம் இவரு படங்களே ஆகாதுப்பா :(

    ReplyDelete
    Replies
    1. வாங்க துஷ்யந்தன்..ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க..உங்களுக்கு பிடிக்கலாம்..skyfall ரொம்ப நல்லா இருக்கு...

      Delete
  7. என்னமோ தெரியல ராஜ்.. Skyfall வெளிவர முன் எல்லா ஜேம்ஸ்பாண்ட் படங்களையும் பார்த்துவிட்டு ஒரு சின்ன தொடர் மாதிரி எழுதலாம்னு நினைத்தேன்.. ஆனாப் Dr.Noவில் ஆரம்பித்து You Only Live Twice வரைக்கும் தான் பார்க்க முடிந்தது. ஒரோ மாதிரியான கதைகள் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. :(

    எனக்கும் யாரையும் குறிப்பிட்டு பிடிக்காதென்றாலும், நீங்கள் சொன்னது போல மற்றவர்களோடு ஒப்பிடும்போது பியர்ஸ் ப்ரொஸ்னன் தான் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கென்றே செதுக்கியது போன்ற முகவெட்டும் ஸ்டைலும் கொண்டவர்..

    உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல...பாண்ட படங்கள் எல்லாமே ஒரே பார்முலவை கொண்டு தான் இருக்கும்...ஒரே ஸ்ட்ரெச்ல எல்லாம் படத்தையும் பார்த்தா ரொம்பவே அலுத்து போயிரும்...
      படம் பார்த்தாச்சு தல...கலக்கலா இருக்கு..

      Delete
  8. ஹாய்..ராஜ்...உங்க விமர்சனம் எப்போ வரும் புது படத்துக்கு...? இன்னிக்கு ரிலீஸ்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவா...இன்னைக்கு தான் படம் ரிலீஸ், படம் பார்த்தாச்சு...இன்னைக்கு சாயிந்திரம் எழுதலாம் என்று இருக்கேன்...

      Delete
  9. ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள் முதன்முதலில் பார்த்த ஜேம்ஸ்பாண்ட்டை கொண்டாடுவார்கள்.

    பாண்ட் படத்தில் தொடரும் மற்றோரு ஒற்றுமை...
    கதாநாயகிகளுக்கு யூனிபார்ம்...ஜட்டிதான்.
    [பாண்ட் படத்தில் நடிகைகளுக்கான உடையில் மட்டும் சிக்கனமாக இருப்பார்கள்.]
    ஜட்டியில் பக்கிள்ஸ்.. அராஜகமாக கவ்வி இருக்கும்.
    இந்த மாதிரி ஜாலி ஒற்றுமைகள்தான் பாண்ட் படத்திற்க்கு எல்லா காலங்களிலும் வரவேற்பு.

    ஸ்கைபால் விமர்சனத்தில் மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்...நான் முதல் முதலில் பார்த்த படம் "world is Not Enough" மறக்கவே முடியாது...படம் பார்த்தாச்சு சார்...நல்லா இருக்கு..

      Delete
  10. சூப்பரான அலசல்.. கலக்கிட்டீங்க!
    எனக்கு படத்துமேல பெருசா எதிர்பார்ப்பு கிடையாது.. உங்க விமர்சனத்தை பொறுத்துதான் பார்க்கலாமா வேணாமான்னே டிசைட் பண்ணனும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க JZ, நீங்களும் ரொம்ப நாளா ஆளே காணம்....அடிக்கடி எழுதுங்க...படம் தாராளமா பார்க்கலாம்..

      Delete
  11. எனக்கு அந்த "no country for oldmen" வில்லன் ரொம்ப பிடிக்கும்.அவருக்காக படம் பார்க்கணும்.எனக்கு இந்த டேனியல் கிராக் 007 என்பது ஏற்று கொள்ள முடியல.ப்ரோச்ணன் என்ன ஸ்டைல்.என்ன அழகு.அவர் 007 ஆகா நடித்த tommorw never dies,die another day பார்த்திருக்கேன்.அப்புறம் casino royal பார்த்தால் இந்த டேனியல் கிராக் .படம் சுமார்.அவரை பிடிக்காததால் quantum of solace இன்னும் பார்க்கவில்லை.skyfall பற்றி பெரிய எதிர்பார்ப்பு இல்லை.ராஜ் பார்த்துவிட்டு எழுது .--

    ReplyDelete
  12. பாஸ் sky fall விமர்சனத்துக்கு விடின் எழுதலையா இன்னும்

    ReplyDelete